ஜூன் 3ம் தேதி சினிமா நிருபர் எழுதியுள்ள நமீதாவுக்கு 60 அடி உயர கட் அவுட் செய்தியை நீங்களும் படித்து பாருங்களேன்.
கவர்ச்சியான உடல் அழகாலும், மலர்ச்சியான முக அழகாலும் கிறங்கடித்து வரும் ஆறேகால் அடி உயர நடிகை நமீதாவுக்கு 60 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து அழகு பார்த்துள்ளனர் ரசிகர்கள். தமிழகத்தில் அல்ல... அண்டை மிநிலமான கர்நாடகத்தில்...!
கன்னட மொழியில் நடிகை நமீதா நடித்து வெளியான நீலகண்டா படம் மெகா ஹிட் ஆகிவிட்டது. இந்த படத்தில் நடிகர் ரவிச்சந்திரனோடு நமீதா போட்ட ஆட்டம் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. இதன் மூலம் கன்னடத்திலும் நமீதாவுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகி வருகின்றன. இதன் உச்சகட்டமாக நமீதாவுக்கு பெங்களூருவில் பிரமாண்ட கட்அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்து அசத்தி விட்டார்களாம் ரசிகர்கள்.
இதுபற்றி நமீதாவிடம் கேட்டபோது, ஆமாங்கோ... என்க்கு கன்னாடாகாவுலோ சிக்ஸ்ட்டி பீட் கட்அவுட் வெச்சிருக்காங்கோ. என் கட் அவுட்டுக்கு பால் ஊத்துறாங்கோ. இத பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்கோ..., என்றார்.
கொசுறு தகவல் : கன்னட ரசிகர்களை கவர்ந்திழுத்த இந்த நீலகண்டா படம்தான் தமிழில் பிரமாண்டம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Sunday, August 17, 2008
நமீதாவுக்கு 60 அடி உயரத்தில் கட்-அவுட்
Posted by லொடுக்குபாண்டி at 7:10 AM
Labels: nirubar.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.
1 comments:
NOGAMA NUNGU THINKIREEERE VOI...................... Nallathan IRUUKKUU UMMA IDEA.
Post a Comment