இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Thursday, August 21, 2008

கருணாநிதியின் மர்ம கவிதையில் சிக்கியவர் யார்?



"சோதனை மேல் சோதனைன்னு ம.தி.மு.க., வில் நீக்கப்பட்ட எம்.பி., புலம்பிட்டிருக்காரு பா...'' என ஆரம்பித்தார் அன்வர்பாய். "கட்சியை உடைக்க 10 கோடி, நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு 10 கோடின்னு ம.தி.மு.க., ஆட்களே பொறாமைப்பட்டுகிட்டுருக்காவ... அவருக்கு என்ன வே சோதனை...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. ""ம.தி.மு.க.,வில் நீக்கப்பட்ட எம்.பி., கணேசன், தஞ்சையில் நடந்த சிவாஜி சிலை திறப்பு விழாவுல பேசும்போது, தி.மு.க., தலைவரை ஓவரா புகழ்ந்து பேசிட்டே இருந் தாராம் பா... கூட்டத்துல இருந்தவங்க எல்லாம் எரிச்சலாகி, கைதட்டியே அவர பேச விடாம பண்ணிட்டாங்களாம்...


""ஒரு காலத்துல தஞ்சை மாவட்டத்தையே தனது பேச்சால கட்டி போட்டவர் நிலைமை இப்படி ஆயிடுச் சேன்னு அவர் ஆதரவாளர்கள் நொந்து போயிட்டாங்க பா... அடுத்ததா, தி.மு.க., தலைமையை கேட்காமலேயே, "ஒரு லட்சம் தொண்டர்களோடு தி.மு.க.,வில் இணைவோம்'னு வேற தன்னிச்சையா அறிவிச்சிருந்தாரு பா...


"ஆனா, "இப்ப இணைப்பு வேண்டாம்; தேர்தலப்போ பார்த்துக்கலாம்'னு தி.மு.க., தலைவர் திடீர் "தடா' போட்டுட்டாராம்... அதனால, என்ன செய்றதுன்னு தெரியாம புலம்பிட்டிருக்காரு பா...'' என முடித்தார் அன்வர்பாய்.


""தைலாபுரம் தோட்டத்துக்கு மூன்றாவது அணி தலைவரு ஒருத்தரு வந்தாராம் வே...'' என்றார் அண்ணாச்சி.


""மாயாவதியாங்க...'' என சிரித்தபடி கேட்டார் அந்தோணிசாமி.


""மகேந்திரகவுடுன்னு ஒரு எம்.எல்.ஏ., வே... சந்திரபாபு நாயுடு கட்சியில பொதுச் செயலரா இருக்காரு... மாஜி மந்திரி... ராமதாசை சந்திச்சு 2 மணி நேரம் பேசினாராம்... மூன்றாவது அணியில பா.ம.க., பங்கேற்க அழைப்பு விடுத்தாகளாம்...


""சந்திரபாபு நாயுடு அனுப்பினதா கவுடு சொல்லியிருக்காரு... "தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கு; நல்ல முடிவா சொல்றேன்'னு பேசி, கவுடுவை ராமதாஸ் வழி அனுப்பி வைச்சாராம் வே...'' என முடித்தார் அண்ணாச்சி.


""அவாள் நமக்கு எப்போதும் சவால் தான்னு முதல்வர் ஒரு கவிதை எழுதிருந்தாரே... அது யாரை மனசுல வைச்சு எழுதிருக்கார்னு கண்டுபிடிச் சேளா ஓய்...'' என கேள்வி எழுப்பினார் குப்பண்ணா.


""பதவி கொடுத்ததா சொல்லிருக்கார்... அடிமரத்தை அசைச்சுப் பார்த்தேன்னு சொல்லிருக்கார்...


"அவாள்'னும் சொல்லிருக்கார்... இதைப் பற்றி கட்சி வட்டாரங்களிலும், எல்லா தரப்பிலும் பெரிய விவாதமே நடத்தி முடிச்சுட்டாவ...


""இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் பொருத்தமான ஆளா, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் தான் வர்றார்... அதனால, அவரைத் தான் முதல்வர் சொல்லிருக்கணும்னு எல்லா தரப்பும் ஏகமனதா தீர்மானிச்சுட்டாங்க வே...'' என்றார் அண்ணாச்சி.


""முதல்வர் மன வருத்தம் அடையற அளவுக்கு அவர் அப்படி என்ன செஞ்சார் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.


""சமீபத்துல நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்துல, "தி.மு.க., கூட்டணியில இருக்கவே கூடாது'ன்னு "ஸ்டிராங்'கா பேசினதா சொல்லுதாக... அதுமட்டுமில்ல, ரெட்டணை போலீஸ் தடியடி தொடர்பா விசாரிக்கப்போன ரங்கராஜன், அரசுக்கு எதிரா நிறைய பேசியிருக்கார்... எல்லாத்தையும் சேர்த்து வைச்சு தான் முதல்வர் கவிதை பாடிட்டார்னு நினைக்கேன்...'' என்றார் அண்ணாச்சி. பெஞ்ச் சிரித்தது.

தினமலர் டீக்க‌டை பெஞ்ச்

2 comments:

Anonymous said...

lu pandi.....

Anonymous said...

TEMPLATE நல்லா இருக்குது சாமீ..

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.