இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Wednesday, August 20, 2008

தமிழ் மொழியில் இன்சினியரிங் : மங்களூர் சிவா காமெடி

இவர் இன்றி வலையுலகம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எழுத்துக்களை எழுதித் தள்ளும் மங்களூர் சிவா கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி ஒரு காமெடி பதிவு போட்டுள்ளார். நெசமாலுமே காமெடியா இருக்கும் அந்த பதிவை நீங்களும் படியுங்களேன்.



தமிழ் மொழியில் இன்சினியரிங். ஐயா புன்னியவான் அரசியல் வியாதிகளே உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா??

கீழ இருக்குறதெல்லாம் ஒரு பதிவுக்கு வந்த பின்னூட்டம் படிச்சி பாருங்க நல்ல நகைச்சுவையா இருக்கும்!!!
//
தாய்மொழியில் யாரும் சந்திரமண்டலம் வரை செல்ல முடியும்.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய எந்த நாட்டையும் உதாரணமாக பார்க்கலாம்.பெல்ஜியம்,லக்சம்பேர்க் போன்ற குட்டி நாடுகள்கூட தங்கள் சொந்த மொழியில்தான் போதிக்கின்றார்கள். ஆங்கிலம் இரண்டாவது மொழி. இந்தியா வல்லரசாக கனவுகாண்பதில் தவறில்லை. அதற்கான முழுத் தகுதியும் உண்டு. ஆனால் இந்தியாவிற்கு இன்னும் தன்னம்பிக்கை இல்லை என்பது எனது ஆழமான கருத்து. தனது சொந்த மொழிகளை போதானை மொழியாகவும், நிர்வாக மொழியாகவும்இந்தியாவால் நடைமுறைப்படுத்தாத வரை இந்திய மொழிகள் எவ்வாறு வல்லரசு மொழியாகப் போகிறது? ஒரு வல்லரசு வேறு ஒரு நாட்டு மொழியில் நிர்வாகம் செய்யவும், போதிப்பதும் தன்மானக்குறைவாக இல்லையா? ஏன் பெல்ஜியம், லக்சம்பேர்க் போன்ற நாடுகளுக்கு உள்ள தன்மானமும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு இல்லாமல் போனது?//

//
தமிழ் நாட்டில் மட்டுமே வேலை செய்ய பொறியியல் படிப்பதில்லை ,என்பதால் இது சாத்தியம் இல்லாதது, ஜப்பானில் ஜப்பானிய மொழியில் பொறியியல் படிக்கலாம் , காரணம் அவர்கள் மொத்த நாட்டுக்குமே அது மட்டும் தான் மொழி.

நம் நாட்டின் மொழியியல் குளறுபடிகள்.உதாரணமாக ஒன்று சொல்கிறேன்.automobile என்பதை +2 இயற்பியல் பாடப்புத்தகத்தில் தானியங்கிகள் என்று போட்டு இருப்பார்கள்.ஆனால் அதைப்படிக்கும் ஒரு மாணவன் அதை automatic என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இங்கே வலைப்பதிவில் கூட பலரும்(அல்லது சிலர்) auto என்பதை தானி என்று சொல்லி எழுதுகிறார்கள், அது "automobile" என்பதன் சுருக்கமான ஆட்டோ என்பதன் தமிழாக்கமே. ஆனால் தானி என்று சொன்னால் இங்கே பல காலம் வலைப்பதிவில் புழங்கியவர்களுக்கே புரியவில்லை. அதே போல தான் தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்திற்கு போனாலும், ஆனால் அதற்கு ஏற்றார்ப்போல் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது ஏற்படும் "ஷாக்" களை தாங்கிக்கொள்ள வேண்டும்.

பொறியியலை தமிழ் நாட்டில் தமிழில் படித்துவிட்டு ஆந்திராவில் கூட பின்னர் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்.ஏன் எனில் தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை!
//

//தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை//
India is union of states. இந்தியா என்பது பல தேசங்களின் கூட்டமைப்பு என்றுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அந்தவகையில் தமிழ் மொழி ஒரு தேசத்திற்கான அதாவது ஒரு நாட்டிற்கான தேசிய மொழி. தாய்மொழியில் கல்வி என்பதும், தமிழ்மண்ணின் பொருளியல் தன்னிறைவு என்பதும் சத்தியமாக சாத்தியமே. எப்படி அடுத்த நாடுகளுடன் ஜப்பான் போன்ற நாடுகள் வர்த்தக உறவு வைத்துக்கொள்கிறதோ அதேபோன்றே நாம் அண்டை தேசங்களான ஆந்திரா, கர்னாடகா போன்றவற்றுடனும் உறவு வைத்துக்கொள்ளலாம். தமிழன் என்றைக்கு இந்தியக் கூட்டமைப்பில் இணைந்தானோ, அன்றையிலிருந்து தன்னம்பிக்கையையும் இழந்து தவிக்கிறான்.-
க. இளஞ்செழியன்
//

எப்பா இளஞ்செழியா அப்ப கர்னாடகாவுக்கு, ஆந்திராவுக்கு, கேரளாவுக்கெல்லாம் போக பாஸ்போர்ட் விசா எல்லாம் வேணுமா?


//வருடம் தோறும் பொறியியல் படிப்பில் ஆயிரக்கணக்கில் தமிழ் வழி படித்தோர் சேர்கிறார்கள், எல்லாரும் தற்கொலை செய்துக்கொள்வதில்லையே, அப்படிப்பார்த்தால் நான் தான் முதலில் செய்துக்கொண்டு இருப்பேன்!//

//
தமிழ் ஒரு தேசிய மொழியா, இந்தியாவிற்கு தேசிய மொழியே இல்லை,ஹிந்திக்கே அரசு மொழி என்று தான் பெயர், தேசிய மொழி என்றல்ல.
//
//
இப்போ இந்தியாவில் ஆங்கிலத்தில் பொறியியல் படித்திருந்தாலும், இங்கிலாந்த், அமெரிக்கா என மேல் படிப்புக்கு போக GRE, TOFEL. IELTS, என்று தேர்வெழுதி அதில் ஆங்கிலப்புலமையை ஏன் காட்ட சொல்கிறான்.அவன் ஸ்டாண்டர்ட்கு நாம இல்லைனு தானே.இந்தியாவில் தமிழில் பொறியியல் படித்தால் அப்புறம் பிற மாநிலங்களுக்கு வேலைக்கு போக தனியாக ஒரு தேர்வு வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
//
இப்பவே இன்சினியரிங் என்ட்ரன்ஸ் அப்பிடித்தானே இருக்கு

//
பொறியியலை தமிழில் படிக்க வைத்தால் இப்போ புரியலைனு செத்தவங்க வெளில வேலைக்கு போக முடியலைனு சாவாங்களே அதுவும் தமிழ் வளர்ச்சி தானா?
//

//
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தாய்மொழி தமிழிலும் ஆந்திரர் தெலுங்கிலும்,கேரள நாட்டினர்மாலையாள மொழியிலும் படிக்க சாத்தியப் படும் பட்சத்தில்
//
அப்ப மீதி இருக்க 25 ஸ்டேட் ஆளுங்க ????

11 comments:

யாதும் ஊரே said...

இந்திய மொழி எதுவுமே பொறியியலுக்கு லாயக்கு இல்லை. அம்மையார் சட்ட சபையில் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது. "சைக்கிள் பாகங்களை தமிழில் கூறவும்"

ரவி said...

ஐ.ஏ.எஸ் தேர்வே தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டபிறகு, எஞ்சினீயரிங் படிப்பென்ன ? மருத்துவத்தையும், சட்டத்தையும் கூட தமிழில் படிக்கலாம்...

மங்களூர் சிவா எழுதியது உங்களுக்கு ஏன் காமெடியாக தோன்றுகிறது என்று புரியவில்லை...

(என்னை மாதிரி) எஞ்சினீயரிங் படிப்பவர்கள் எல்லாம் தட்டேந்தி வெளிமாநிலங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தமிழ்வழி போதனா முறையை எதிர்க்கலாம்...

நம் நாடு, நம் உள்நாட்டு நிறுவனங்கள், நமது மக்கள் என்ற அளவில் தாய்நாட்டு சிந்தனை உங்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்...

சென்னையில் படித்து, செங்கல்பட்டில் மருத்துவம் பார்க்கும் ஒரு மருத்துவருக்கு எதற்கு ஆங்கிலம் கட்டாயம் ? ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலம் மட்டுமல்ல, சைனீஸ், கொரியன், ப்ரெஞ்சு, நோர்வேஜியன் வரை படித்துக்கொள்ளலாமே தவிர, தமிழை, தமிழ்வழி கல்வியை எதிர்க்கவேண்டாமே நன்பரே.

ரவி said...

///இந்திய மொழி எதுவுமே பொறியியலுக்கு லாயக்கு இல்லை. அம்மையார் சட்ட சபையில் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது. "சைக்கிள் பாகங்களை தமிழில் கூறவும்"///

உங்கள் முகத்தில் நீங்களே எச்சில் உமிழ்ந்துகொள்வதற்கு சமமானது இந்த பின்னூட்டம் சிவகாசி பீனிவாசன் அவர்களே !!!

ரவி said...

///அம்மையார் சட்ட சபையில் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது. "சைக்கிள் பாகங்களை தமிழில் கூறவும்"///

ஏன் கம்பூட்டரை கணினி என்று மாற்றி இன்றைக்கு உபயோகிக்கவில்லையா நாம் ? தேவை என்று வரும்போது எவால்வ் செய்வதில் தமிழுக்கு நிகர் தமிழே !!

தமிழ்த்தாய் இன்று இளமையோடு இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

அம்மையார் சொல்வதை எடுத்துக்காட்டாக சொல்லி பின்னூட்டம் இடும் நீங்கள் யார் என்று தெரிகிறது...

உங்கள் பெயரில் உள்ள வடமொழியை முதலில் களைந்துவிட்டு இந்திய மொழியான தமிழை கிண்டல் அடிக்கலாம் பீநிவாசன் அவர்களே...

Anonymous said...

இந்திய மொழிகள் இலாயக்கு இல்லை என்று எந்த மொழியறிஞர் தெரிவித்தார்?
அம்மையார் அரைகுறைத் தமிழறிவிற் போட்ட அரசியற் கூப்பாடு ஏற்கனவே
பலரும் இணையத்தில் பிரித்துமேய்ந்தது தான். எவ்வளவு நாளைக்குத் தான் இதையே திருப்பிச் சொல்லிட்டு இருப்பீங்க?

அப்போது வியனரசு, இராமகி ஐயா போன்றோரின் பதிலாய் வந்த சொற் பட்டியல் இது..

seat, saddle = குந்துகை, இருக்கை
handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே
குறிக்கிறது.)
wheel = வளவி (கையில் போடுவதும் வளவி தான்.)
mud guard = மட் காப்பு (மண்+காப்பு)
stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.)
carrier = தூக்கி
pedal = மிதி
spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழுக்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.)
wheel rod = வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டையே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப்பலவற்றையும் வேறுபாடு விளங்கிப் பயன்படுத்த
வேண்டும்.)
bell = மணி
rim = விளிம்பு
tube = தூம்பு
tyre = தோலி (வியப்பாக இருக்கும்; தோலில் இருந்த கிளைத்த தோலி என்பது பழத்திற்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான மேல் உறைகளுக்கும் பயன்படக் கூடிய சொல் தான்)
chain = கணை (கண்ணி கண்ணியாய் கோத்துக் கணைத்தது கணை)
break = தடை
forks = பிரிகை
sprocket = பற்சகடு
gears = பல்லிணை
pump = இறைப்பி
dynamo = துனைமி ("கதழ்வும் துனைவும் விரைவுப் பொருள" என்பது தொல்காப்பியம். இந்தச் சொல்
ப.அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியில் இருக்கிறது. அருமையான சொல்.)
reflector = மறுபளிப்பி
caliper = இடுக்கி
shoe = கவை
cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள்.உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.)
frame = வரம்பை, (வரம்பு கட்டியே ஏதொன்றையும் உருவாக்குகிறோம். வரம்பு என்பது எல்லை மட்டுமல்ல.)
lever = எழுவை, நெம்புகோல்

லொடுக்குபாண்டி said...

நண்பர் செந்தழல் ரவி அவர்களுக்கு...

பதிவர் மங்களூர் சிவா தனது பதிவுக்கு கொடுத்திருக்கும் தலைப்பு என்ன தெரியுமா?
//தமிழ் மொழியில் இன்சினியரிங் - செம காமெடி//.
அதனாலதான் நான் காமெடி பதிவு என்று எனது தலைப்பிலும் குறிப்பிட்டிருந்தேன். தப்புன்னா மன்னிச்சிடுங்க சாமி...!

ரவி said...

மங்களூர் சிவா பின்னூட்டங்களில் தமிழர்கள் எழுதியது என்று படியுங்க மாம்ஸ்...

மங்களூர் சிவா said...

/
tube = தூம்பு
/

கரெக்டா டைப்படிங்கய்யா எழுத்து மாறீடுச்சினா எக்குதப்பா ஆகீடும்

:))

மங்களூர் சிவா said...

@ravi

எல்லா தொழில் நுட்ப பெயர்க்ளும் இந்த மாதிரி மொழி பெயர்க்க ஒரு 10 வருடம் ஆகாது???

மங்களூர் சிவா said...

அப்ப கர்நாடககாரன் சும்மா இருப்பானா ஆந்திரா வாடு சும்மா இருப்பானா

கன்னட் மொழியில் இன்சினியரிங்
தெலுங்கு மொழியில் இன்சினியரிங்
மலையாள மொழியில் இன்சினியரிங்
பிகாரி மொழியில் இன்சினியரிங்
மராத்தி மொழியில் இன்சினியரிங்
எச்சட்ரா
எச்சட்ரா

காமெடியா இல்ல??

மங்களூர் சிவா said...

/
செந்தழல் ரவி said...

மங்களூர் சிவா எழுதியது உங்களுக்கு ஏன் காமெடியாக தோன்றுகிறது என்று புரியவில்லை...

/

நன்றி ரவி

/
(என்னை மாதிரி) எஞ்சினீயரிங் படிப்பவர்கள் எல்லாம் தட்டேந்தி வெளிமாநிலங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தமிழ்வழி போதனா முறையை எதிர்க்கலாம்...
/
/
நம் நாடு, நம் உள்நாட்டு நிறுவனங்கள், நமது மக்கள் என்ற அளவில் தாய்நாட்டு சிந்தனை உங்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்...
/

ஜப்பான் கொரியா எல்லாம் தனி நாடுகள் தமிழ்நாடு என்பது தனிநாடா?? தமிழ்நாட்டில் படிக்கும் எல்லாருக்கும் தமிழ்நாட்டில் வேலைகிடைத்துவிடுமா??

இந்தியாவை போல 26 மொழி வேறு எந்த தேசத்திலாவது பேசுகிறார்களா அப்படி என்றால் அங்கு கல்வி எந்த மொழியில்???

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.