ரஜினிகாந்தும், தயாரிப்பாளர்களும் சேர்ந்து குசேலன் படத்தை எடுத்த விநியோகஸ்தர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்கவிருப்பதாக தினகரனில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதனை நீங்களும் படியுங்களேன்.
குசேலன் படத்தால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்க ரஜினியும் படத் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.
பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், அஸ்வினி தத் இணைந்து தயாரித்த குசேலன் படம், ஆக.1ம் தேதி வெளியானது. இதன் வினியோக உரிமையை ப¤ரமிட் சாயமீரா நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியது. தமிழகத்தில் சில பகுதிகளுக்கான உரிமையை ரூ.15 கோடிக்கு வேறு வினியோகஸ்தர்களுக்கு பிரமிட் சாய்மீரா விற்றது.
குசேலன் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால், ஆந்திரா வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் தங்களுக்கு ரூ.13 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.
நஷ்ட ஈடு வழங்காவிட்டால், இனி ரஜினி படங்களுக்கும் கவிதாலயா படங்களுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம்Õ என தியேட்டர் அதிபர்கள் எச்சரிததனர். இந்நிலையில், குசேலன் தயாரிப்பாளர்கள் பாலசந்தர், விஜயகுமார், அஸ்வினி தத் ஆகியோர் ரஜினியை சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நஷ்ட ஈடு வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதாக வினியோகஸ்தர்களிடம் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் பன்னீர் செல்வம், நேற்று மாலை ரஜினியை சந்தித்தார். அப்போது நஷ்ட ஈடு வழங்குவதை ரஜினியும் உறுதி செய்தார். இதன்படி, தமிழகம், ஆந்திராவில் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு (பிரமிட் சாய்மீராவைத் தவிர்த்து) ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று தெரிகிறது. ரஜினி, தயாரிப்பாளர்கள், இயக்குனர் வாசு ஆகியோர் இந்த தொகையை வழங்குகின்றனர். ரஜினி மட்டும் ரூ.3 கோடி வழங்குகிறார் என்று கூறப்படுகிறது.
சாய்மீரா தயாரிப்பில் ரஜினி: குசேலன் படத்தை ரூ.60 கோடிக்கு வாங்கிய பிரமிட் சாய்மீரா நிறுவனம் உலகம் முழுவதும் இதை வெளியிட்டது. இந்நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெரிய தொகையாக இருப்பதால், பிரமிட் சாய்மீரா தயாரிப்பில் ஒரு படத¢தில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ரோபோ படத்துக்குப் பின் இதில் அவர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Saturday, August 23, 2008
குசேலன் வினியோகஸ்தர்களுக்கு ரூ.7 கோடி நஷ்டஈடு
Posted by லொடுக்குபாண்டி at 11:51 AM
Labels: dinakaran.com
Subscribe to:
Post Comments (Atom)
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.
5 comments:
dinakaran la pottale athu poi seithiya than irukkum.
//சாய்மீரா தயாரிப்பில் ரஜினி: குசேலன் படத்தை ரூ.60 கோடிக்கு வாங்கிய பிரமிட் சாய்மீரா நிறுவனம் உலகம் முழுவதும் இதை வெளியிட்டது. இந்நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது//
இது உலக மகா அண்ட புளுகு ..தினகரன் வேண்டும் என்றே தினமும் பொய் செய்திகளை போட்டு வருகிறது.
தினமலர் கூடதான் ரஜினி பத்தி ரொம்ப பொய் செய்தி போடுது. அதையும் கண்டிக்கிறேன்.
ரஜினியை தவிர எல்லோரும் சொல்வது பொய் ?????????
நமக்கு சாதகமான செய்தி இல்லன்ன அது பொய் செய்தியா... அட முட்டாள்களா
lollu shabha
Post a Comment