இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Wednesday, September 3, 2008

தினமலர் மீது அட்டாக் : சன் குழுமத்துக்கு அல்வா செய்தி


தினமலர் பற்றிய செய்தி என்றாலே சன் குழுமத்துக்கு அல்வா கிடைத்ததுபோல இருக்கும் போல. ஏற்கனவே தினமலர் ரமேஷ் மீதான பெண் நிருபர் உமாவின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி கடந்த ஆண்டு வந்த போது வந்தபோது சன் டிவி, சன்நியூஸ், தினகரன், தமிழ்முரசு போன் சன் குழும நிறுவனங்கள் செய்திகளை போட்டு தினமலரை தாக்கி எழுதின. இப்போது வேலூர் தினமலரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு கார்ட்டூன் படம் போட்டதற்காக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தையும், போலீசார் நடத்திய தடியடியையும் தினகரனில் முதல் பக்கத்தில் படத்துடன் போட்டு தாளித்து விட்டார்கள். இந்த செய்தியில் உள்நோக்கம் இருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க. (இது தினகரனில் வந்த செய்திதாணுங்கோ....)


நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட தினமலர் நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதனால் வேலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனிதமான நோன்புக் காலமான ரமலான் மாதம் தொடங்கும் நேரத்தில் தினமலர் இவ்வாறு நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட சம்பவம் தமிழக முஸ்லிம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேலிச் சித்திரம் வெளியான திங்களன்று மாலையில் வேலூர் அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நேற்று காலை வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு குவிந்தனர். கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரைபீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அதிரடிப்படையினரும் போலீசாரும் அங்கு குவிக்கப் பட்டனர்.

வேலூர் கலெக்டர் தர்மேந்திர பிரதாப் யாதவ், டிஐஜி சுந்தரமூர்த்தி, எஸ்பி அறிவுசெல்வம், டிஆர்ஓ சுகந்தி, ஏடிஎஸ்பி ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்தனர். போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போக சொன்னார்கள். ஆனால், கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
அப்போது திடீரென யாரோ கல் வீசினர். ஏடிஎஸ்பி ராமதாஸ் மீது ஒரு கல் விழுந்ததில், அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. உடனே போலீஸ் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். விரட்டி விரட்டி தடியடி நடத்தியதில் பலர் காயம் அடைந்தனர். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை தடியடி நடத்தி தாக்குவதா என்று முஸ்லிம் பெரியவர்கள் போலீச் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

தடியடியில் காயம் பட்டவர்களை ரத்தம் சொட்ட அழைத்துவந்த சிலர் அதிகாரிகளை சூழ்ந்து நின்று கோஷமிட்டனர். அவர்களை கலைந்துபோகுமாறு கலெக்டர் கூறினார். ஆனால், ‘இந்து - முஸ்லிம் இடையே பகையை தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரை கைது செய்ய வேண்டும்’ என்று கோஷமிட்டபடி கூட்டத்தினர் முன்னேறினர்.

இதற்கிடையே, மக்கான் சந்திப்பில் ஏராளமானவர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் மீது கல் வீசப்பட்டது. பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ஒரு பஸ்சில் இருந்த 3 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதை தொடர்ந்து மக்கானிலும் போலீசார் தடியடி நடத்தினர். 25க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.

பின்னர், கலெக்டரும் உயர் போலீஸ் அதிகாரிகளும் தினமலர் அலுவலகத்துக்குள் சென்று, நிர்வாகிகளிடம் பேசினர். நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டவரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என கூட்டத்தினர் உறுதியாக இருப்பது பற்றி தெரிவித்தனர். இதற்கிடையே, வெளியே நின்றிருந்த கூட்டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவர்களை போலீசார் துரத்தி துரத்தி அடித்தனர்.
பிறகு, நபிகள் பற்றிய கார்ட்டூனை கொடுத்தவர் இவர்தான் என்று ஒரு ஊழியரை தினமலர் நிர்வாகிகள் போலீஸ் முன் நிறுத்தினர். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவத்தால் வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெங்களூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் ரோந்து வருகின்றனர்.

Tuesday, September 2, 2008

FLASH NEWS : வேலூர் தினமலர் ஆபீஸ் மீது அட்டாக்

இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்தி வெளியிடப்பட்டதை கண்டித்து வேலூரில் தினமலர் ஆபீஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் பத்த அவ்வப்போது தரக்குறைவாக செய்தி வெளியிடுவது தினமலரின் வாடிக்கை. இன்னிக்கு காலையில 4000 இஸ்லாமியர்கள் தினமலர் ஆபீஸ் முன்னாடி வந்து கல்லடிச்சதா அங்க இருக்குற என்னோட பிரண்ட் சாகுல் அமீது போன்ல ‌சொன்னார்.

Monday, September 1, 2008

தாயையும், மகளையும் கல்யாணம் செய்த காமுகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாயையும், மகளையும் கல்யாணம் செய்தி ஆசாமி வெட்டி கொல்லப்பட்டார்.


நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(வயது55). இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு முருகம்மாள் என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார். அப்போது முருகம்மாளுக்கு வள்ளி என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. அதை தன் குழந்தை போல் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பால்பாண்டிக்கும் முருகம் மாளுக்கும் முருகன் என்ற மகன் பிறந்தான். முருகனும் வள்ளியும் அக்காள்- தம்பி முறையில் வளர்ந்து வந்தனர்.

ஆனால் காமுகனான பால்பாண்டிக்கு நாட்கள் செல்லச் செல்ல முருகம் மாள் மீதுள்ள மோகம் குறைந்து அவளது மகள் வள்ளி மீது மோகம் பிறந்தது. வள்ளி பெரியவள் ஆனதும் அவளையும் பால் பாண்டியே திருமணம் செய்து கொண்டார். இதில் பால்பாண்டிக்கும் வள்ளிக்கும் இரண்டு குழந்தை பிறந்தது.

அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பால்பாண்டியின் முதல் மகன் முருகன் வளர்ந்து வாலிப வயதை அடைந் தான். அப்போது தான் அவனுக்கு தன் தந்தை தன் தாயையும் தன் அக்காவையும் திருமணம் செய்த விபரம் தெரிந்தது.

இதனால் முருகனுக்கு தன் தந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பால்பாண்டி அடிக்கடி தன் மனைவி வள்ளி (வயது27)யிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகன்(24) "ஏன் இப்படி குடும்பத்தை நாசம் செய்தது மட்டும் அல்லாமல் அடிக்கடி தகராறு செய்கிறாய்'' என்று கூறி பால்பாண்டியை மிதித்து கீழே தள்ளினான். அதன் பிறகு அங்கு கிடந்த அம்மி கல்லை எடுத்து பால்பாண்டி தலையில் போட்டு நசுக்கினான். இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு கல்லிடைக் குறிச்சி போலீசார் விரைந்து சென்று முருகனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தான் பால்பாண்டி, தாயையும், மகளையும் திருமணம் செய்து குழந்தையும் பெற்ற விபரம் தெரிய வந்தது.

இந்த சம்பவம் அந்தப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி : மாலைமலர்

தீ நகர் தீ விபத்து நடந்தது எப்படி? முழுவிவரம்

சென்னை தியாகராயநகர் சரவணா ஸ்‌டோர்சில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலைமலரில் வெளியாகியுள்ள விரிவான செய்தி


5 தளங்களை கொண்ட இந்த பாத்திரக்கடையில் வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மிஷின், டி.வி., மிக்ஸி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், பர்னிச்சர் வகைகளான கட்டில், சோபா, மெத்தை, பீரோ மற்றும் அனைத்து பாத்திர வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடையில் 5-வது தளத்தில் இன்று காலை 5.45 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் பக்கவாட்டு ஜன்னல்களில் இருந்து தீச்சுவாலைகள் கரும் புகையுடன் வெளி வந்தது. இதை அந்த வழி யாக வாக்கிங் சென்ற வாலிபர் ஒருவர் பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

6.15 மணியளவில் தியாகராய நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டன. அங்கு பெரிய அளவில் தீ பற்றி எரிய தொடங்கியதால் சென்னை நகரில் பல இடங்களில் இருந்தும் 10 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன.

உயரமான இடங்களில் தீயை அணைக்க பயன் பயன்படுத்தப்படும் 2 `ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வண்டி களும் வரவழைக்கப்பட்டது. சுமார் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க தொடங்கினர். ஆனால் தீ வேகமாக பரவியதால் கடைக்குள் செல்ல முடிய வில்லை.

பக்கத்து கடைகளின் ஷட்டர்களை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அங்கும் கரும் புகை சூழ்ந்து கொண்டதால் அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

இதற்கிடையே கடையின் 5-வது தளத்தில் இருந்து 4-வது மற்றும் 3-வது தளத் திற்கும் தீ மளமளவென பரவியது. அருகில் உள்ள லக்கி பிளாசா என்ற கட்டிடத்தின் மேல் அமைக் கப்பட்ட சரவணா ஸ்டோர் கட்டிடமும் தீப்பற்றிக் கொண்டது. இதில் அங்கிருந்து கோடிக் கணக்கான மதிப்பிலான பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.

கடையின் 5-வது தளத்தின் ஒரு பகுதியில் அங்கு வேலை பார்க்கும் 1000க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அனைவரும் பெட்டி படுக்கைகளுடன் வீதிகளை நோக்கி ஓடி வந்து உயிர் பிழைத்தனர்.

கடைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலாளிகள் மற்றும் சில ஊழியர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர் களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

5-வது மாடியில் சிக்கித் தவித்த 8 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

தென்சென்னை இணை போலீஸ் கமிஷனர் குணசீலன் மேற்பார்வையில் துணை போலீஸ் கமிஷனர் முத்துசாமி, உதவி போலீஸ் கமிஷனர்கள் கண்ண பிரான், சேது, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே தீ அருகில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கும் பரவியது. இதுவும் 5 மாடி கட்டிடம் ஆகும். இங்கு 5 மற்றும் 4-வது தளத்தில் புகை கிளம்பி தீ வேகமாக பரவியது.

முன் கூட்டியே அங்கிருந்த கோடிக்கணக்கான தங்கம், வைர நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டுச் சென்றனர். இதனால் நகைகள் தப்பியது.

இந்த தீ விபத்தை தொடர்ந்து ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

தீ விபத்தை நேரில் பார்த்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பிரபு கூறியதாவது:-

இது போன்ற உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் அதை அணைப்பதற்காக `ஸ்கைலிப்ட்' தீயணைப்பு வண்டிகள் அதிகமாக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் 2 வண்டியை கொண்டு வந்து கண்ணா மூச்சி காட்டிக் கொண்டி ருக்கிறார்கள்.

அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டி ருக்கும்.


சென்னையில் பிரபல வணிக ஸ்தலமாக விளங்கிய மூர் மார்க்கெட்டில் கடந்த 1980 வாக்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு ஏராள மான கடைகள் எரிந்து நாசமாயின. அதை மிஞ் சும் வகையில் நடுத்தர மக்கள் லட்சச்கணக்கில் பொருட்கள் வாங்குவதற் காக வந்து செல்லும் ரங்க நாதன் தெருவில் நடை பெற்றுள்ள முதல் பெரிய தீ விபத்து இதுவாகும்.

சென்னையின் மிகப் பெரிய வணிக ஸ்தலமாக விளங்கும் ரங்கநாதன் தெருவில் பாதுகாப்பு குறை பாட்டால் ஏற்பட்டுள்ள தீ விபத்தை தொடர்ந்து அங்குள்ள அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி ஜவுளி, நகை கடைகளில் தீ விபத்து குறித்த முன்எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப் பட்டுள்ளனவாப என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய் துள்ளனர்.

இதற்கிடையே தீ அருகில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கும் பரவியது. இதுவும் 5 மாடி கட்டிடம் ஆகும். இங்கு 5 மற்றும் 4-வது தளத்தில் புகை கிளம்பி தீ வேகமாக பரவியது.

முன் கூட்டியே அங்கிருந்த கோடிக்கணக்கான தங்கம், வைர நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டுச் சென்றனர். இதனால் நகைகள் தப்பியது.


தியாகராய நகர் ரங்க நாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடை யில் பிடித்த தீ பக்கத்து கடைகளுக்கும் பரவியது. இதனால் அதில் இருந்து பயங்கர புகை மண்டலம் கிளம்பியது.

பிளாஸ்டிக் மற்றும் ரசா யன கலவைகளால் தயா ரிக்கப்பட்ட வீட்டு உப யோக பொருட்கள் எரியும் போது அதில் இருந்து அதிக அளவில் புகை மண்டலமும் அமல வாசனையும் கிளம் பியது.

அந்த புகை தியாகராய நகரையே மறைக்கும் அள வுக்கு பல கிலோ மீட்டர் உயரத்துக்கு ஆகாயத்தில் பரவியது. இதனால் சென் னையின் மற்ற பகுதிகளில் வெயில் அடிக்க தியாக ராய நகரில் மட்டும் சூரியன் மறைந்து மழை மேகங்கள் திரண்டது போல் இருட்டாக காணப்பட்டது.

சிறிது நேரத்தில் திடீர் என்று மழை பெய்ய ஆரம் பித்தது. ரசாயன வாசனையும் இருந்தது. வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து அதில் இருந்து வெளியான புகை யால் தியாகராய நகரில் அமில மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

‌நேரடி ரிப்போட்: தீயை அணைக்க போனவர்களின் 20 பேர் கதி...

சென்னை தியாகராயநகருக்கு பெருமை சேர்க்கும் ரங்கநாதன் தெருவுக்கு பெருமைசேர்க்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடையில தீ பிடிச்சிடிச்சின்னு கேள்விபட்டதும் பைக்க எடுத்துட்டு மயிலாப்பூருல இருந்து ஆழ்வார்பேட்டை வழியா தேனாம்‌பேட்டை சிக்னலை கடந்து பாண்டிபசார் வயழியா தி.நகர் போனேன். தேனாம்பேட்டை சிக்னலில் பச்சைவிளக்கு சிக்னலுக்கு நின்னப்பவே தூரமா கரும் புகை தெரிஞ்சிது.

வேகவேகமா தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு நண்பரின் ஆபீஸ் முன்னால வண்டிய நிறுத்திட்டு உஸ்மான் ரோட்டுல நடந்து போனேன். ஒரே கூட்டம். அங்க ரங்கநாதன் தெருவுக்குள்ள போக யாரையுமே போலீஸ்காரங்க அனுமதிக்கல. சரவணா ஸ்டோர் கடையில வேலை பாக்குறவங்களும் அங்கங்க நின்னு பரிதாபத்தோட ‌வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட உள்ள யாராவது இருந்தாங்களான்னு கேட்டேன்.

ஆமா சார்... ராத்திரி பண்ணென்டு மணிக்குத்தான் கடைய அடைப்போம். காலையில 5 மணிக்குக்கெல்லாம் கொஞ்சம்பேர் கடையை தூக்குறதுக்கு உள்ள வருவோம். 25 பேராவது காலையில் கடைக்கு வந்துடுவோம். இன்னிக்கும் 25 பேர் வந்திருப்பாங்க. அவங்க கடைக்குள்ள போனாங்‌களான்னு தெரியல. இங்க எங்கயாது இருக்காங்களான்னு சுத்தி பாக்குறோம். தீ எரியறத பாத்தா பயமா இருக்கு. கடைக்குள்ள தீயை அணைக்க 20 போனாங்கன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க....ன்னு சொல்லி கண்ணீர் வடித்தார்.

உண்மையிலேயே கடைக்குள்ள சரவணா ஸ்டோர் கடை உழியர்கள் போனாங்களா? அவங்க நெலம என்னன்னு தெரியல. பிளாஸ்டிக், மர பொருள் எரிவதால் தீயை அணைக்க முடியாம போலீஸ் தவிச்சிட்டு இருக்கு. தீய முழுசா அணச்சாத்தான் முழு வெவெரமும் தெரியும்ன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க.

FLASH NEWS : கரண்ட் பிரச்சினை : கருணாநிதி ராஜினாமா முடிவு?

தமிழ்நாடு முழுசும் அறிவிக்கப்படாத மின்தடை என்ற நிலைமை மாறி இன்று முதல் அறிவிக்கப்பட்ட மின்தடை செயல்படுத்தப்பட்டுள்ளது. டெய்லி ராத்திரி பகல் பாராமல் அஞ்சு மணி நேரம் கரண்ட்டை புடுங்கி விடும் அரசாங்கத்துக்கு அண்ணா திமுக, பாமக, மதிமுக, தேமுதிக, சமக, கம்யூனிஸ்ட்டுங்கன்னு எல்லா கட்சிங்களும் கண்டனமா தெரிவிச்சிட்டு இருக்காங்க. மாண்புமிகு புரட்சி தலைவி இதயதெய்வம் டாக்டர் அம்மா, கரண்ட்டை சரியா கையாள தெரியாத கருணாநிதி ராஜினாமா செய்யணும்னு அறிக்கை வுட்டுருக்காங்க.

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு தொடர்பாக அம்மா விடுத்துள்ள அறிக்கை:

தற்போது தமிழ்நாட்டில் "அறிவிக்கப்பட்ட மின்வெட்டு', "அறிவிக்கப் படாத மின்வெட்டு' என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.

தற்போதைய மின் நிலைமைக்கு திமுக அரசு தெரிவிக்கும் முதல் காரணம், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது என்பதாகும். எனது ஆட்சிக் காலத்தின் முதல் 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நிர்வாகத் திறமையின்மையே இதற்கு முக்கியக் காரணம்.

அரசு சொல்லும் 2வது காரணம், நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதாகும். சுய லாபத்திற்காக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெறும் கருணாநிதியால் இதை ஏன் பெற முடியவில்லை?

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரி வினியோகிக்கப் படுவதாகவும், பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முறையாக, சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

மூன்றாவதாக கூறப்படும் காரணம், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் குறைந்துவிட்டது என்பதாகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 7 மாதங்கள், குறைந்தபட்சம் 5 மாதங்கள் மட்டும் தான் காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால் தமிழ் நாட்டிலோ ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.

காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்காத காலங்களில் அனல், புனல் மற்றும் மத்திய தொகுப்பி லிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு காற்றை எதிர்நோக்கி இருக்கிறோம்; நீரை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லப்படும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமானது.

நான்காவதாக கூறப்படும் காரணம், பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்தபோதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது என்பதாகும். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந் தாவது வாங்கி வினியோகிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். குறைந்த அளவுதான் வாங்க முடிகிறது என்கிற காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

இன்னும் சில காரணங்களான "குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது', "மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும், மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு மைய அரசை கோரியுள்ளது' போன்றவற்றை பார்த்தால் மின்வெட்டு தொடரும் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

சட்டசபையை கலைக்க வேண்டும்:

முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு பதவிக்கு வர வழி ஏற்படும்.

இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை மக்கள் தற்போது விரும்பவில்லை, வெறுக்கிறார்கள். எனவே கருணாநிதி உடனடியாக சட்டசபையக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.


மாண்புமிகு இதயதெய்வம் புரட்சிதலைவி டாக்டர் அம்மாவோட கோரிக்கய ஏத்துக்கிட்டு மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் ராஜினாமா செய்வாரா, மாட்டாரான்னு யாருக்காவது சந்தேகம் இருக்கா? சந்தேகமே இல்லாதவங்க உங்களோட பதிலை இங்க சொல்லிட்டு போங்க.

தலைப்புல இருக்குற மாதிரி ஒரு செய்தி கண்டிப்பா கருணாநிதி, ஜெயலலிதான்னு யாரு ஆட்சியிலயும் வரவே வராதுங்கிறதுதான் என்னோட ஒப்பீனியன். நீங்க என்ன சொல்றீங்கணா?

Sunday, August 31, 2008

டாக்டர் ராமதாசுக்கு மக்கள் வெச்சிருக்குற பட்டப்பெயர்கள்


சினிமாவுல காமெடி நடிகர்கள் பண்ணும் காமெடியை விட அதிகமாக காமெடி செஞ்சு மார்க்குகளை அள்ளியிருப்பவர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள். சினிமா, அரசியல், விளையாட்டு என்று எதையுமே விடாமல் விமர்சித்து தள்ளும் இந்த ராமதாசுக்கு, பச்சோந்தி, பச்ச கஞ்சா, காடுவெட்டிக்கு காவல்காரன் என்று பல பெயர்களை அரசியல்வாதிகளே சொல்லியிருக்கிறார்கள். நீங்க உங்க மனசுல இந்த ஐயாவுக்கு என்ன பெயர் வெச்சிருக்கீங்கப்பு... பயப்படாம சொல்லுங்கப்பு..........

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.