இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Monday, September 1, 2008

தீ நகர் தீ விபத்து நடந்தது எப்படி? முழுவிவரம்

சென்னை தியாகராயநகர் சரவணா ஸ்‌டோர்சில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலைமலரில் வெளியாகியுள்ள விரிவான செய்தி


5 தளங்களை கொண்ட இந்த பாத்திரக்கடையில் வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மிஷின், டி.வி., மிக்ஸி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், பர்னிச்சர் வகைகளான கட்டில், சோபா, மெத்தை, பீரோ மற்றும் அனைத்து பாத்திர வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடையில் 5-வது தளத்தில் இன்று காலை 5.45 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் பக்கவாட்டு ஜன்னல்களில் இருந்து தீச்சுவாலைகள் கரும் புகையுடன் வெளி வந்தது. இதை அந்த வழி யாக வாக்கிங் சென்ற வாலிபர் ஒருவர் பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

6.15 மணியளவில் தியாகராய நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டன. அங்கு பெரிய அளவில் தீ பற்றி எரிய தொடங்கியதால் சென்னை நகரில் பல இடங்களில் இருந்தும் 10 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன.

உயரமான இடங்களில் தீயை அணைக்க பயன் பயன்படுத்தப்படும் 2 `ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வண்டி களும் வரவழைக்கப்பட்டது. சுமார் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க தொடங்கினர். ஆனால் தீ வேகமாக பரவியதால் கடைக்குள் செல்ல முடிய வில்லை.

பக்கத்து கடைகளின் ஷட்டர்களை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அங்கும் கரும் புகை சூழ்ந்து கொண்டதால் அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

இதற்கிடையே கடையின் 5-வது தளத்தில் இருந்து 4-வது மற்றும் 3-வது தளத் திற்கும் தீ மளமளவென பரவியது. அருகில் உள்ள லக்கி பிளாசா என்ற கட்டிடத்தின் மேல் அமைக் கப்பட்ட சரவணா ஸ்டோர் கட்டிடமும் தீப்பற்றிக் கொண்டது. இதில் அங்கிருந்து கோடிக் கணக்கான மதிப்பிலான பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.

கடையின் 5-வது தளத்தின் ஒரு பகுதியில் அங்கு வேலை பார்க்கும் 1000க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அனைவரும் பெட்டி படுக்கைகளுடன் வீதிகளை நோக்கி ஓடி வந்து உயிர் பிழைத்தனர்.

கடைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலாளிகள் மற்றும் சில ஊழியர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர் களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

5-வது மாடியில் சிக்கித் தவித்த 8 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

தென்சென்னை இணை போலீஸ் கமிஷனர் குணசீலன் மேற்பார்வையில் துணை போலீஸ் கமிஷனர் முத்துசாமி, உதவி போலீஸ் கமிஷனர்கள் கண்ண பிரான், சேது, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே தீ அருகில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கும் பரவியது. இதுவும் 5 மாடி கட்டிடம் ஆகும். இங்கு 5 மற்றும் 4-வது தளத்தில் புகை கிளம்பி தீ வேகமாக பரவியது.

முன் கூட்டியே அங்கிருந்த கோடிக்கணக்கான தங்கம், வைர நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டுச் சென்றனர். இதனால் நகைகள் தப்பியது.

இந்த தீ விபத்தை தொடர்ந்து ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

தீ விபத்தை நேரில் பார்த்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பிரபு கூறியதாவது:-

இது போன்ற உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் அதை அணைப்பதற்காக `ஸ்கைலிப்ட்' தீயணைப்பு வண்டிகள் அதிகமாக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் 2 வண்டியை கொண்டு வந்து கண்ணா மூச்சி காட்டிக் கொண்டி ருக்கிறார்கள்.

அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டி ருக்கும்.


சென்னையில் பிரபல வணிக ஸ்தலமாக விளங்கிய மூர் மார்க்கெட்டில் கடந்த 1980 வாக்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு ஏராள மான கடைகள் எரிந்து நாசமாயின. அதை மிஞ் சும் வகையில் நடுத்தர மக்கள் லட்சச்கணக்கில் பொருட்கள் வாங்குவதற் காக வந்து செல்லும் ரங்க நாதன் தெருவில் நடை பெற்றுள்ள முதல் பெரிய தீ விபத்து இதுவாகும்.

சென்னையின் மிகப் பெரிய வணிக ஸ்தலமாக விளங்கும் ரங்கநாதன் தெருவில் பாதுகாப்பு குறை பாட்டால் ஏற்பட்டுள்ள தீ விபத்தை தொடர்ந்து அங்குள்ள அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி ஜவுளி, நகை கடைகளில் தீ விபத்து குறித்த முன்எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப் பட்டுள்ளனவாப என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய் துள்ளனர்.

இதற்கிடையே தீ அருகில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கும் பரவியது. இதுவும் 5 மாடி கட்டிடம் ஆகும். இங்கு 5 மற்றும் 4-வது தளத்தில் புகை கிளம்பி தீ வேகமாக பரவியது.

முன் கூட்டியே அங்கிருந்த கோடிக்கணக்கான தங்கம், வைர நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டுச் சென்றனர். இதனால் நகைகள் தப்பியது.


தியாகராய நகர் ரங்க நாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடை யில் பிடித்த தீ பக்கத்து கடைகளுக்கும் பரவியது. இதனால் அதில் இருந்து பயங்கர புகை மண்டலம் கிளம்பியது.

பிளாஸ்டிக் மற்றும் ரசா யன கலவைகளால் தயா ரிக்கப்பட்ட வீட்டு உப யோக பொருட்கள் எரியும் போது அதில் இருந்து அதிக அளவில் புகை மண்டலமும் அமல வாசனையும் கிளம் பியது.

அந்த புகை தியாகராய நகரையே மறைக்கும் அள வுக்கு பல கிலோ மீட்டர் உயரத்துக்கு ஆகாயத்தில் பரவியது. இதனால் சென் னையின் மற்ற பகுதிகளில் வெயில் அடிக்க தியாக ராய நகரில் மட்டும் சூரியன் மறைந்து மழை மேகங்கள் திரண்டது போல் இருட்டாக காணப்பட்டது.

சிறிது நேரத்தில் திடீர் என்று மழை பெய்ய ஆரம் பித்தது. ரசாயன வாசனையும் இருந்தது. வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து அதில் இருந்து வெளியான புகை யால் தியாகராய நகரில் அமில மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

4 comments:

லொடுக்குபாண்டி said...

1..2...3...testing

Anonymous said...

தங்களின் இந்த சேவை நாட்டுக்கு மிகவும் தேவை பாண்டி. தொடருங்கள்.

துளசி கோபால் said...

தினத்தந்தியில் 800 மாலைமலரில் 1000 இப்படி????

ஆமாம். ஒரு தளத்தில் இத்தனை பேர் எப்படித் தங்க முடியும்?

ஒரு பெரிய கலியாணமண்டபமே போதாதே.....

Anonymous said...

தீ விபத்துல இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

விபத்தக்கு காரணமானவர்களை ஆண்டவன் பார்த்துகொள்வார்.

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.