தமிழ்நாடு முழுசும் அறிவிக்கப்படாத மின்தடை என்ற நிலைமை மாறி இன்று முதல் அறிவிக்கப்பட்ட மின்தடை செயல்படுத்தப்பட்டுள்ளது. டெய்லி ராத்திரி பகல் பாராமல் அஞ்சு மணி நேரம் கரண்ட்டை புடுங்கி விடும் அரசாங்கத்துக்கு அண்ணா திமுக, பாமக, மதிமுக, தேமுதிக, சமக, கம்யூனிஸ்ட்டுங்கன்னு எல்லா கட்சிங்களும் கண்டனமா தெரிவிச்சிட்டு இருக்காங்க. மாண்புமிகு புரட்சி தலைவி இதயதெய்வம் டாக்டர் அம்மா, கரண்ட்டை சரியா கையாள தெரியாத கருணாநிதி ராஜினாமா செய்யணும்னு அறிக்கை வுட்டுருக்காங்க.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு தொடர்பாக அம்மா விடுத்துள்ள அறிக்கை:
தற்போது தமிழ்நாட்டில் "அறிவிக்கப்பட்ட மின்வெட்டு', "அறிவிக்கப் படாத மின்வெட்டு' என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.
தற்போதைய மின் நிலைமைக்கு திமுக அரசு தெரிவிக்கும் முதல் காரணம், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது என்பதாகும். எனது ஆட்சிக் காலத்தின் முதல் 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நிர்வாகத் திறமையின்மையே இதற்கு முக்கியக் காரணம்.
அரசு சொல்லும் 2வது காரணம், நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதாகும். சுய லாபத்திற்காக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெறும் கருணாநிதியால் இதை ஏன் பெற முடியவில்லை?
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரி வினியோகிக்கப் படுவதாகவும், பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முறையாக, சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
மூன்றாவதாக கூறப்படும் காரணம், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் குறைந்துவிட்டது என்பதாகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 7 மாதங்கள், குறைந்தபட்சம் 5 மாதங்கள் மட்டும் தான் காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால் தமிழ் நாட்டிலோ ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.
காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்காத காலங்களில் அனல், புனல் மற்றும் மத்திய தொகுப்பி லிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு காற்றை எதிர்நோக்கி இருக்கிறோம்; நீரை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லப்படும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமானது.
நான்காவதாக கூறப்படும் காரணம், பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்தபோதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது என்பதாகும். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந் தாவது வாங்கி வினியோகிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். குறைந்த அளவுதான் வாங்க முடிகிறது என்கிற காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.
இன்னும் சில காரணங்களான "குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது', "மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும், மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு மைய அரசை கோரியுள்ளது' போன்றவற்றை பார்த்தால் மின்வெட்டு தொடரும் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சட்டசபையை கலைக்க வேண்டும்:
முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு பதவிக்கு வர வழி ஏற்படும்.
இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை மக்கள் தற்போது விரும்பவில்லை, வெறுக்கிறார்கள். எனவே கருணாநிதி உடனடியாக சட்டசபையக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சிதலைவி டாக்டர் அம்மாவோட கோரிக்கய ஏத்துக்கிட்டு மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் ராஜினாமா செய்வாரா, மாட்டாரான்னு யாருக்காவது சந்தேகம் இருக்கா? சந்தேகமே இல்லாதவங்க உங்களோட பதிலை இங்க சொல்லிட்டு போங்க.
தலைப்புல இருக்குற மாதிரி ஒரு செய்தி கண்டிப்பா கருணாநிதி, ஜெயலலிதான்னு யாரு ஆட்சியிலயும் வரவே வராதுங்கிறதுதான் என்னோட ஒப்பீனியன். நீங்க என்ன சொல்றீங்கணா?
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Monday, September 1, 2008
FLASH NEWS : கரண்ட் பிரச்சினை : கருணாநிதி ராஜினாமா முடிவு?
Posted by லொடுக்குபாண்டி at 10:07 AM
Labels: flash news, karunanithi
Subscribe to:
Post Comments (Atom)
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.
4 comments:
1..2..3.. டெஸ்டிங்
No Change. It wont happen.
Lodukku...
நாட்டில் என்ன நடந்தாலும் இந்த அரசியல்வாதிகள் மட்டும் திருந்தவே மாட்டார்கள்.
நல்லா கிளப்புறாங்கய்யா பீதியயயயயயயயயயயயயய
Post a Comment