காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதிதான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி.
அதற்கு நெடுமாறன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அடுத்த முறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார்.
அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.
பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.
1969ம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும், இது நாடாளுமன்றத் தொகுதியல்ல, இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.
அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.
அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.
1996ம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.
1983ம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.
பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
இந்த செய்தி தட்டிஸ் தமிழ்ல இருந்து சுட்டதுதாணுங்கோ.........
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Saturday, August 30, 2008
இது கருணாநிதியின் துரோகமா? பதில் சொல்லுங்கப்பு!
Posted by லொடுக்குபாண்டி at 8:25 PM 9 comments
Labels: karunanithi, nedumaran
வெட்டிப்பயலின் லொள்ளு ஜோக்ஸ்
பதிவர் வெட்டிப்பயல் கடந்த 2006ம் ஆண்டு அக்டொபர் 26ந்தேதி போட்டிருக்கிற லொள்ளு பதிவ நீங்களும் படிச்சி பாருங்களேன்.
லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க...
சரினு களம் எறங்கிட்டேன்
ரெட்:
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள
மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்
அஜித்: அது!!!
----------------------------------------------------------
அருணாச்சலம்:
தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.
செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!
------------------------------------------------------------
ரன்:
அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?
விஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல...
-------------------------------------------------------------
வல்லவன்
சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்
மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு...
--------------------------------------------------------------
தவசி
பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா
இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்
Posted by லொடுக்குபாண்டி at 10:32 AM 3 comments
Labels: vettipaiyal.blogspot.com
Friday, August 29, 2008
ரஜினி கட்சி தொடங்குனா சிரஞ்சீவி மாதிரி கூட்டம் வந்திருக்குமா?
தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்று தமிழக மக்கள் பட்டிமன்றம் நடத்தி நடத்தி ஓய்ந்து போயிட்டாங்க. இப்போ புதுசா ஒரு பட்டிமன்றம் நடத்த தொடங்கியிருக்காங்களாம். அந்த பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ரஜினி அரசியலுக்கு வந்தா... தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்குனப்போ வந்த கூட்டம் மாதிரி கூட்டம் வந்திருக்குமா? என்பதுதான் அந்த கேள்வி.
உங்க தரப்பு வாதத்தை சொல்லுங்க..............
Posted by லொடுக்குபாண்டி at 8:25 PM 8 comments
இந்துக்களை கடவுளின் ஆயுதத்தை அவமதிக்கும் விகடன்
திலகவதிங்கிற ஒரு பெண் நிருபர் இந்துக்கடவுளின் ஆயுதமான உடுக்கையை நடிகையின் இடுப்புடன் ஒப்பிட்டு ஒரு பேட்டியை எழுதியிருக்கிறார். இது 03-09-08 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியாயிருக்கு. 26ம் பக்கத்துல வந்திருக்குற இலியானா பேட்டியில இருக்குற அந்த வரி என்ன தெரியமா?
இலியானாவ பாத்ததுமே இந்த பெண் நிருபருக்கு, பரமசிவன் பார்த்து பார்த்து செய்த உடுக்கை மாதிரி உடம்புன்னு சப் எடிட்டர்கள் பில்டப் கொடுப்பாங்கனு தோணிச்சாம்.
இந்த வர்ணணை ஒரு சினிமாக்காரி பேட்டியில தேவயா? நீங்களே சொல்லுங்கப்பா.....
Posted by லொடுக்குபாண்டி at 4:45 PM 25 comments
Labels: விகடன்
இவங்க திருந்தவே மாட்டாங்களா?
நாட்ல வாழுல எல்லோருக்மே ஒரு பிரச்சினை இருக்கு. அதுல த(ல)லையாய பிரச்சினை உயிர் பிரச்சினை. இவங்கள பாருங்களேன். ஆபத்துன்னு தெரிஞ்சும் இப்படி போறாங்க.
இப்பிடி போறவங்கள நடு ரோட்டுல நிக்க வெச்சி........(?) Fil in d blnks.
Posted by லொடுக்குபாண்டி at 4:30 PM 1 comments
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
கஷ்டத்திலிருக்கும் மூத்த தயாரிப்புங்களுக்கு மாதாந்திர உதவிய தயாரிப்பு சங்கம் வழங்குது. இதுல புதுசா பிரச்சினை முளைச்சிருக்காம்... பிரச்சினை முளைச்சிருக்காம்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த தயாரிப்புங்க தேர்தல்ல, எதிர் அணிக்கு வேலை செஞ்ச சில தயாரிப்புங்களுக்கு உதவி தொகைய கொடுக்காம இழுத்தடிக்கிறாங்களாம்... இழுத்தடிக்கிறாங்களாம்... கஷ்டத்துல வாழுற அவுங்க, பாக்குறவங்ககிட்ட கண்ணீர்விட்டு அழுவுறாங்களாம்... அழுவுறாங்களாம்...
ஒரு ட் படம் கொடுக்காம எங்கேயும் பேச மாட்டேன்னு சபதம் எடுத்துருக்கேன். இந்த விழா நடத்துறவுங்க என்னோட குடும்ப நண்பர்ங்கிறதாலதான் கலந்துகிட்டேன்Õ. வரிசையா பத்து விழாக்கள்ல விரலு நடிகரு மைக்க புடிச்சாலே இப்படித்தான் ஆரம்பிக்கிறாரு... ஆரம்பிக்கிறாரு... இருக்கிற அம்புட்டு வ¤ழாக்கள்லேயும் விதவிதமா டிரஸ்போட்டு கலக்குறாரு. மைக்க பிடிச்சா பப்ளிசிட்டியே பிடிக்காத மாதிரி பீலா விடுறாருÕன்னு கோடம்பாக்கம் பேசிக்குது... கோடம்பாக்கம் பேசிக்குது...
தெலுங்கு தேசத்து உச்ச நடிகர், கட்சி ஆரம்பிச்சிட்டாரு. கட்சியில சேர ரிட்டையர்டு ஆன தெலுங்கு தேசத்து நடிகைங்க தீவிர முயற்சியில இறங்கியிருக்காங்களாம்... இறங்கியிருக்காங்களாம்... திருப்பதியில் பிறந்த விந்திய நடிகை, பூனைக்கண் நடிகை, அபிநயமான குத்தாட்ட நடிகை, தொங்குதோட்ட நடிகை, பிரியமான பானு நடிகைன்னு நிறைய பேர் வரிசை கட்டி நிக்குறாங்களாம்... நிக்குறாங்களாம்...
தமிழ்முரசு பத்திரிகையில இருந்துதான் இத சுட்டு போட்டிருக்கேன் சுட்டு போட்டிருக்கேன். இத படிச்சிட்டு என்ன திட்டறவங்க திட்டலாம்... திட்றவங்க திட்டலாம்..... பாரட்டனும்னு ஆசப்படுறவங்க பாராட்டலாம்... பாராட்டலாம்...
Posted by லொடுக்குபாண்டி at 6:10 AM 1 comments
Labels: kisukisu
Thursday, August 28, 2008
நச் கமெண்ட் அடிக்கிறவங்களுக்கு நமீதா படம் இலவசம்
அவிழ்ந்து விழுகிற ரேஞ்சுக்கு டிரஸ் போட்டிருக்கிற நமீதா பற்றி நச் கமெண்ட் அடிக்கிறவங்களுக்கு நமீதா படம் இலவசம். வாங்கோ... வாங்கோ... நச் கமெண்ட் அடிச்சிட்டு போங்கோ... போங்கோ...
Posted by லொடுக்குபாண்டி at 12:45 PM 9 comments
Labels: namitha padam
இவங்களுக்கு எப்பத்தான் அறிவு வருமோ? ஒரு உருப்படியான பதிவு
சென்னை மீனம்பாக்கத்தில் நேற்றிரவு நான்கு பேர் ரயிலில் அடிபட்டு இறந்தனர். அதே பகுதியில் தண்டவாளத்தில் காலை செல்போனில் பேசிய படியும், விழுந்து, எழுந்தும் ரிலாக்ஸாக செல்லும் இளசுகள். தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி என அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்திகளை படித்து, அப்போதைக்கு வருத்தப்படுவதுடன் சரி. விழிப்புணர்வு மட்டும்... ஊஹ¨ம்!
இவங்களுக்குல்லாம் எப்பத்தான் புத்தி வருமோ?
தமிழ்முரசு படத்தில் வெளியான படத்தைத்தான் சுட்டு இங்க போட்டிருக்கேன்.
Posted by லொடுக்குபாண்டி at 6:14 AM 9 comments
Labels: tm.dinakaran.co.in
Wednesday, August 27, 2008
கிசுகிசு கிசுகிசு : இத படிக்காதீங்க ப்ளீஸ்...
கிரிக்கெட் வீரர் கிசுகிசு, டென்னிஸ் வீரர் கிசுகி, தமிழ்சினிமா கிசுகிசு, கோலிவுட் கிசுகிசு, நடிகை கிசுகிசு, நடிகர் கிசுகிசு, அரசியல் கிசுகிசு, தொழிலதிபர் கிசுகிசுன்னு இந்த பதிவுல நான் எதயுமே போடல. அதனாலதான் இத படிக்காதீஙக ப்ளீஸ்னு தலைப்பு போட்டேன்.
சரி... வந்துட்டீங்க. இந்த போட்டோவுல இருக்குற பாப்பா யாருன்னு பார்த்து சொல்லிட்டு போங்க சாமீயோவ். போட்டோவ எங்கன்னு தேடுறீயளா? பிளிஸ் கிளிக் கியர்.
மொக்கை பதிவு போட்டா நெறய பேர் திட்டி கமெண்ட் போடுவாங்கனு கேள்விப்பட்டேன். நீங்க எப்படி சாமீ. ஒரு கருத்து சொல்லீட்டு போவீங்களா? சும்மா ஒன்னுமே சொல்லாம போயிடுவீஙகளா?
Posted by லொடுக்குபாண்டி at 10:19 PM 4 comments
இந்த பொண்ணு யாருன்னு தெரியுதா? சரியா சொன்னா பிரைஸ்
படத்துல குல்பி ஐஸ் மாதிரி, செக்கச் செவேன்னு இருக்குற கையை கட்டிக்கினு, சிரிக்காம சிரிச்சிட்டு இருக்குற இந்த பொண்ணை நீங்க எங்கயாவது பாத்துருக்கீங்களா? பாத்தவங்க இந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பாப்போம். சரியா சொன்னா ஒரு பிரைஸ் ஒங்களுக்கு கிடைக்கும். என்ன பரிசுன்னு பின்னால சொல்லுவேன். சரியா? வர்ட்டாடாடாடா........................
Posted by லொடுக்குபாண்டி at 8:19 PM 17 comments
Labels: nadigai padam
Tuesday, August 26, 2008
ஹீரோ-டைரக்டர் லடாய் : சினிமா கிசுகிசு
கோடம்பாக்கம் கோடங்கி சொல்லியிருக்க வாக்குதான் இன்னிக்கு லொடுக்குபாண்டியோட பதிவு. தமிழ்முரசு பத்திரிகையில நேத்திக்கு வந்திருக்கிற கோடம்பாக்கம் கோடங்கி கிசுகிசுவை நீங்களும் படிச்சி பாருங்க சாமியோவ்.
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
அம்மா காவியத்துல ஹீரோவா நடிக்கிறாரு பாட்டு வாத்தியார். பட தயாரிப்பு வேலையில அவரு என்ட்ரி கொடுத்து ஏகப்பட்ட பணத்தை அபேஸ் பண்ணிட்டாராம்... அபேஸ் பண்ணிட்டாராம்...தட்டிக்கேட்ட இயக்குனர வேலை பாக்கத் தெரியலைனு நீக்கிட்டாராம்... நீக்கிட்டாராம்... படம் தயாரிக்கிறவரு, அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானவரு. அவங்க மூலமா பெரிய இடத்துக்கு நியூஸ் போயிருக¢கு. இப்போ பெரிய இடம், பாட்டு வாத்தியார் மேல கோபமா இருக்காம்... கோபமா இருக்காம்...
கொக்கரக்கோ படத்தின் ஷ¨ட்டிங்கில அரிவாள் இயக்குனருக்கும், காதல் ஹீரோவுக்கும் இடையே அடிக்கடி லடாய் ஏற்படுதாம்... லடாய் ஏற்படுதாம்... சீன அப்படி வச்சா நல்லா இருக்கும், வசனத்தை இப்படி பேசினா நல்லா இருக்கும்னு அரிவாளுக்கே அறிவுரை சொல்றாராம் ஹீரோ. ‘உன் வேலைய மட்டும் பாருÕங்கிற அர்த¢தத்துல வரும் நெல்லை வசனத்தை சொல்லி, அரிவாள் காய்ச்சி எடுத்துட்டாராம்... ஹீரோவை காய்ச்சி எடுத்துட்டாராம்...
ஹீரோ ஆசையில இருந்த சிலிம்ரன் நடிகையோட கணவர், இப்ப அந்த ஆசைய துறந்துட்டாராம்... துறந்துட்டாராம்... Ôஅழகான மனைவிக்கே ஹீரோயின் சான்ஸ் வரமாட்டேங்குது. நாம எங்கே ஹீரோ ஆவுறதுÕனு அனுபவத்துல உணர்ந்துட்டாராம்... உணர்ந்துட்டாராம்... அதனால இனிமே கணவர் வேலைய மட்டும் பாத்துக்கிட்டு கப்சிப்னு இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்காராம்... முடிவு பண்ணியிருக்காராம்... பாசக்கார மனைவியோ தமிழ்ல ஒரு தயாரிப்பு கம்பெனிய ஆரம்பிக்கப்போறாராம். அதுக்கு கணவரை எம்.டி. ஆக்கணுங்கிற ஆசையில இருக்காராம்... ஆசையில இருக்காராம்...
Posted by லொடுக்குபாண்டி at 7:00 AM 1 comments
Labels: tm.dinakaran.co.in
Monday, August 25, 2008
தமிழ்மணம் சூடான இடுகைகள் குறித்த முக்கிய செய்தி
தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் எந்த அடிப்பபையில தேர்ந்தெடுக்கப்படுதுன்னு பதிவர் ஜேசப் பால்ராஜ் தன்னோட வலைப்பூவுல ஒரு முக்கியமான கேள்வியை கேட்டிருக்கார். அவருக்கு மட்டுமில்லை... எனக்கும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செஞ்சிது. அதனால இதுக்கு தீர்வு சொல்ற இந்த பதிவை போடுறேன்.
பயணங்கள் பதிவில் கடந்த் ஜூன் மாசம் 16ம் தேதி ஒரு பதிவு போட்டிருக்காங்க. அந்த முக்கியமான பதிவை நீங்களும் படிச்சு பாருகேளேன்.
MR.BURUNO.... IPPA OK VA?
Posted by லொடுக்குபாண்டி at 6:15 PM 13 comments
Labels: www.payanangal.in
எனக்கு பிடிச்ச நாலு லைன் கவிதை
இந்த கவிதையை எங்கு படித்தேன்று தெரியல. ஆனா ரொம்ப நாளா என் மனசுலயே இருக்கு. எனக்கு நல்ல கவிதையா தெரியுது. இத படிச்சிட்டு உங்களுக்கு எப்டி தெரியதுன்னு சொல்லுங்க சாமீ...
தினம் தினம் காத்திருந்தேன்...
நீ வருவாய் என...!
வந்தவுடன் நீ கேட்டாய்
உன் வருவாய் என்ன?
================
இது எப்டி இருக்கு?
Posted by லொடுக்குபாண்டி at 6:02 PM 1 comments
Labels: lodukkupandi.blogspot.com
தினமலர் குழப்பம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?
தினமலர் நாளிதழில் நேத்திக்கு ரஜினிகாந்த் பத்தி ஒரு செய்தி கட்டுரை போட்டிருந்தாங்க. சூப்பர் ஸ்டார் தகுதியை இழக்கிறாரா ரஜினி?ன்னு போட்டிருக்கிற அந்த செய்தியை படித்தவர்கள் தினமலரின் இந்த குழப்ப செய்தி பற்றிய உங்க கமெண்ட்டை இங்கே சொல்லிட்டு போங்க.
தினமலர் செய்தியை படிக்காதவங்க இங்கே போய் படிச்சிட்டு வந்து கமெண்ட்டை சொல்லுங்க.
ஆனா கமெண்ட் மட்டும் சொல்லாம போயிடாதீங்க சாமீ... ப்ளீளீளீளீஸ்.
Posted by லொடுக்குபாண்டி at 7:22 AM 9 comments
Labels: dinamalar.com
Sunday, August 24, 2008
ஒடுக்கப்பட்ட பாலிலியல் உணர்வுகள் : ஜ்யோவ்ராம் சுந்தரின் யதார்த்த கதை
பிரமிள்
அவனுக்குப் பத்து வயதிருக்கும்போது ஊரிலுள்ள வேசிகளிடம் போக ஆரம்பித்தான். யாராவது கேட்டால், தன் தாயாரைப் பார்க்க முடியாத ஏக்கம் நினைவிலி மனதில் இருந்து அதுவே எல்லாப் பெண்களிடமும் ஆசையைத் தூண்டுகிறது என்பான். அவனது தொல்லை பொறுக்க முடியாமல் வேசிகள் எல்லாரும் ஊரைவிட்டகன்றனர்.
அவன் செத்துப் போனான்.
எங்கும் வேலைக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். சொந்தமாக வியாபாரம் செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டான். ஆனால் அம்முயற்சிகள் கைகூடாததால் இருபத்தைந்து வயதில் மளிகைக் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். நல்ல சூட்டிகையான பையன் என்ற பெயரை மிக எளிதில் பெற்றான்.
இடைவெட்டாக ஆசிரியர் கருத்து : இந்தக் கதை ஏன் இப்படி இருக்கிறது என்று இதற்குள் உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். கதை நன்றாக இல்லை என்பவர்களுக்கு ஒரு வார்த்தை : இது என் கதை; என் இஷ்டப்படி தான் எழுதுவேன் (ஆறு வார்த்தைகள் ஆகிவிட்டதா.?). Raymond Federman 'யதார்த்தம் / கற்பனை உலகம், நனவு மனம் / நினைவிலி மனம், கடந்த காலம் / நிகழ் காலம், உண்மை / உண்மையற்றது ஆகிய வித்தியாசப் படுத்தல்களைக் கலைவது' நடக்கும் என்கிறார் (பார்க்க: மீட்சி 33; மொழிபெயர்ப்பு நாகார்ஜூனன்).
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்று பாடிக் கொண்டே வந்தவனின் முகத்தில் எருமை மாடு காறி உமிழ்ந்தது. கையிலிருந்த கத்தியால் அதன் கழுத்தை வெட்டி ரத்தத்தைத் துளிக்குடச் சிந்தாமல் குடித்தான். இனி ஊரிலுள்ள ஒரு எருமை மாட்டையும் விடக்கூடாது என்று கையில் பசூக்காவை எடுத்துக் கொண்டு எதிர்படும் மாடுகளை எல்லாம் சுட ஆரம்பித்தான். அவன் கையில் பசூக்காவை வைத்திருந்த காட்சி ராஜ ராஜ சோழனுக்குக் கிலியை ஊட்டியது. தன் நாட்டை விட்டு, ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்தான். அவனே பிற்பாடு ஹிட்லராக மாறினான். (இதைப் போன்ற சம்பவத்தை நீங்கள் கோவி மணிசேகரின் வரலாற்று நாவலில் படித்திருந்தால் நான் பொறுப்பல்ல - ஆசிரியர்).
Posted by லொடுக்குபாண்டி at 10:25 PM 2 comments
Labels: jyovramsundar.blogspot.com
செத்து செத்து விளையாடுவோமா?: தம்பி கேட்ட கேள்வி இது!
பதிவர் தம்பி 2006ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி எழுதிய பதிவுதான் இது. செத்து செத்துவிளையாடுவோமா என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் சுவாரஸ்யமான பதிவை நீங்களும் படியுங்களேன்.
மேல இருக்கற நம்ம கைப்புள்ளயின் வலது
கரத்தை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன். சமீப காலமா பிரபலமாகிட்டு
வரும் நகைச்சுவை நடிகர்.
"என் புருசன் குழந்தை மாதிரி" படத்தில
வடிவேலுவ ஓட ஒட வெரட்டி, கொலவெறியோட
ஆவேசமா தொரத்தி காதை லேசா தொட்டு பச்ச
புள்ள மாதிரி விளையாட்டு விளையாடுவாரே
அவர்தான் இந்த முத்துக்காளை. சங்கத்தில
இருக்கற ஆளுங்களுக்கு இவர தெரிஞ்சிருக்கும்.
சில சமயத்தில சரக்கை விட ஊருகாய் நல்லா
இருக்கறதில்லையா அதே மாதிரி இவர் நடிச்ச
ராமகிருஷ்ணா என்ற படத்தில சார்லி இருந்தும்
இவரது நடிப்பையே எல்லாரும் ரசித்தார்கள்.
நான் உட்பட. தமிழ் நகைச்சுவை காட்சிகளில்
எனக்கு தெரிந்து மோனோ ஆக்டிங் என்பதை
புகுத்தியவர் இவர் என்றே நினக்கிறேன். இல்லாத
ஒன்றை இருப்பதாக காட்டி பிறரை ஏமாற்றுவதை
ராமகிருஷ்ணா படத்தில் மிக அருமையா காமெடி
பண்ணியிருப்பாரு.
ஒரு பைட்டராக திரையுலகில் அறிமுகமாகி இன்று
நகைச்சுவையில் குறிப்பிடும்படியான இடத்தை
பிடித்திருக்கிறார்.
இப்ப என்னாத்துக்கு இந்த இழு இழுக்கற நீ?
மேட்டர் இன்னானு சொல்றா வென்று! என்று
கேட்பதற்கு முன்னால் நானே சொல்றேன்.
நேத்திக்கு வழக்கம்போல வலைப்பக்கத்தில
உலாத்திக்கிட்டு இருந்தேன். இட்லிவடை பக்கத்தில
கூகிள் தேடுதல் பத்தி எழுதி இருந்தார்.
இப்படியெல்லாம் வசதி இருக்குதான்னு பாத்தேன்.
நாம எக்கு தப்பா கேட்டா என்ன பதில்
சொல்லும்னு பாத்தேன். அப்டி என்னப்பா
கேட்டுபுட்டே நீயின்னு நாதஸ் கோஷ்டில வர
ஆளுங்க செந்தில கேட்ட மாதிரி கேளுங்க..
நான் எப்ப சாகப்போறேன்? இதத்தான் கேட்டேன்.
இன்னும் பதிமூணு வருசந்தான் என்னோட ஆயுசாம்
அதுக்குள்ள பூட்ட கேசுதானாம். அந்த வலைதளத்தில்
சொல்லியிருந்தாங்க.முத்துக்காளை ஞாபகம் வந்துடுச்சி
இந்த தளத்தை பார்த்தவுடன். செத்து செத்து
விளையாடலாமா? பாத்ததும் சிரிப்பு சிரிப்பா
வந்திடுச்சி அப்படியே ஒரு யோசனையும் வந்திச்சு
இதெல்லாம் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்
என்று ஒரு கற்பனை.
வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடறவங்க
இறந்தநாளும் தெரிஞ்சா அதையும் கொண்டாடுவாங்களா?
இல்ல துக்கப்பட்டு அன்னிக்கே ஒப்பாரி வைக்க
ஆரம்பிச்சுடுவாங்களா?. அன்னிக்கு கேக் வெட்டி
கொண்டாடுவாங்களா? புதுத்துணி உடுத்துவாங்களா?
கோயிலுக்கு போயி கடவுள்கிட்ட பெட்டிஷன்
குடுப்பாங்களா?
Posted by லொடுக்குபாண்டி at 10:19 PM 3 comments
Labels: umakathir.blogspot.com
தமிழ்மண முகப்பில் உங்க படம் : தமிழ்ப்ரியன் அசத்தல் ஐடியா
தமிழ்மணம் முகப்பில் உங்கள் படத்தை இடம்பெற வைக்கிறது எப்படின்னு பதிவர் தமிழ்ப்ரியன் அசத்தலான ஐடியாவை படத்துடன் கொடுத்திருக்கிறார். அதனை நான் ரெண்டு நாளிக்கு முன்னால முயற்சி செய்தேன். முடிவு இன்னும் கிடைக்கவில்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
தமிழ் மணத்தில் தங்களது பதிவை இணைத்துள்ள பதிவர்களில் பலரும் பல பதிவுகளிலும், கூட்டுப் பதிவுகளிலும் எழுதுகின்றனர். ஆனால் பலருக்கும் தமிழ் மண முகப்பில் பதிவு வரும் போது எந்த பதிவில் எழுதி உள்ளனர் என்பது பார்வையாளர்களுக்கு உடனடியா தெரிவதில்லை. தமிழ் மண முகப்பில் பதிவுக்கான படத்தை தெரிய வைப்பதன் மூலம் இந்த குறையை நீக்க முடியும்....
எடுத்துக்காட்டுக்கு எங்கள் வேடந்தாங்கல் பதிவிலும், என்னோட இடம் என்ற இடத்திலும் கூட எழுதுகிறேன். இரண்டில் எதில் பதிவிட்டாலும் அதற்கான தனியான படம் தெரியும்.
ஓரத்தில் படத்தில் உள்ள இரண்டும் நான் எழுதிய பதிவாக இருந்தாலும் இரண்டுக்கும் தனித் தனி படம் இருப்பதால் பதிவர்களுக்கு சுலபமாக விளங்கும்.
பெரும்பாலானவர்கள் இதை விரும்பினாலும் இதற்காக தமிழ் மண கருவிப்பட்டையில் செய்ய வேண்டிய மாற்றங்களின் சிரமத்தைக் கருதி செய்யவில்லை. என்னால் முடிந்த அளவு சுலபமாக அதை விளக்குகிறேன்....
அதற்கு முன் உங்கள் பதிவில் தமிழ் மணக் கருவிப்பட்டை சேர்க்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் பூர்ணாக்காவின் இந்த பக்கத்திற்கு சென்று சேர்த்துக் கொள்ளுங்கள். சுலபமான வழிமுறைகளுடன் சிறந்த இடமிது
http://poorna.rajaraman.googlepages.com/home
இனி......... இதற்கு செய்ய வேண்டிய மாற்றத்தை இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.
1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்
2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்
1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்
முதலில் நீங்கள் எந்த படத்தை தமிழ் மண முகப்பில் வர வைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அந்த படத்தை தயார் செய்து கொள்ளுங்கள். அது உங்களது புகைப்படமாகவோ, அல்லது உங்கள் பதிவின் பெயர் கிராபிக்ஸ் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். இதை இணையத்தில் upload செய்ய வேண்டும்.
இணையத்தில் upload செய்ய..... http://www.imageshack.us/ இங்கு செல்லுங்கள்.
படத்தில் உள்ளபடி இந்த இணையதளம் திறக்கும்.
1. Browse பொத்தானை அழுத்தி உங்களது படத்தைத் தேர்ந்தெடுங்கள்
2. Resize Image என்று உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும்
3. அதை அடுத்து உள்ள DropDown List ல் 100 x 75 (Avatar) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4. Host it என்பதை அழுத்தவும்....
சற்று நேரத்தில் நாம் அளித்த படம் http://www.imageshack.us/ தளத்தில் ஏற்றப்பட்டு நமக்கு அதற்கான URL கள் தரப்படும். (கீழே உள்ளவாறு) அதில் கடைசியாக உள்ள URL ஐ நாம் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
(எ.கா) http://img201.imageshack.us/img201/1695/meoldrp5.png
இப்போது முதல் கட்டம் முடிந்தது.
2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்
இனி உங்கள் Blogger கணக்கில் Login செய்து நுழைந்து கொள்ளுங்கள். அங்கு
Dash Board, Layout, Edit HTML பகுதிக்கு செல்லுங்கள். Edit Template என்பதற்கு கீழே இருக்கும் Expand Widget Templates என்பதில் உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவின் HTML CODE முழுவதுமாக கீழே இருக்கும்.
முதலில் இவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து பிரதி எடுத்து பாதுகாப்பாக ஒரு நோட்பேட் பைலில் வைத்துக் கொள்ளுங்கள்
இனி அதில் தமிழ் மண கருவிப்பட்டை இரண்டுக்கு செல்லுங்கள்.... அது கீழ்க்கண்டவாறு இருக்கும்.
முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கணும்னா தமிழ்ப்ரியன் வலைப்பூவுக்கு போயிடுங்க சாமீ. நான் எவ்வளவோ முயற்சி செஞ்சும், அவர் போட்டிருக்கிற HTML CODE என் வலைப்பூவுல தெரிய மாட்டேங்குது.
Posted by லொடுக்குபாண்டி at 6:46 AM 2 comments
Labels: majinnah.blogspot.com
குசேலன் முதல்வார வசூல் முழு விவரம்
குசேலன் படம் பிளாப். முதல் வாரத்திலேயே வசூல் ஆட்டம் கண்டுட்டுன்னு பத்திரிகை, டி.வி., வெப்சைட்னு திட்டி தீர்த்துட்டு இருக்காங்க. குசேலன் படத்தின் முதல் வார வசூல் முழு விவரத்தை பதிவர் சினிமா நிருபர் வெளியிட்டிருக்கிறார். அதனை நீங்களும் படியுங்களேன்.
குசேலன் படம் தமிழகம் முழுவதும் 84 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்த தியேட்டர்களுக்கு முதல் வாரத்தில் கிடைத்த வசூல் முமு விவர பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம். இதனை பார்த்தே குசேலன் எந்த அளவுக்கு ரசிகர்கள் சென்று பார்த்திருக்கிறார்கள் என்பது தெரியும். (கீழே இருக்கும் அட்டவணையை கிளிக்கி பெரிய சைஸில் படிக்கவும்)
Posted by லொடுக்குபாண்டி at 6:02 AM 4 comments
Labels: nirubar.blogspot.com
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.