இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Sunday, August 24, 2008

தமிழ்மண முகப்பில் உங்க படம் : தமிழ்ப்ரியன் அசத்தல் ஐடியா

தமிழ்மணம் முகப்பில் உங்கள் படத்தை இடம்பெற வைக்கிறது எப்படின்னு பதிவர் தமிழ்ப்ரியன் அசத்தலான ஐடியாவை படத்துடன் கொடுத்திருக்கிறார். அதனை நான் ரெண்டு நாளிக்கு முன்னால முயற்சி செய்தேன். முடிவு இன்னும் கிடைக்கவில்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.



தமிழ் மணத்தில் தங்களது பதிவை இணைத்துள்ள பதிவர்களில் பலரும் பல பதிவுகளிலும், கூட்டுப் பதிவுகளிலும் எழுதுகின்றனர். ஆனால் பலருக்கும் தமிழ் மண முகப்பில் பதிவு வரும் போது எந்த பதிவில் எழுதி உள்ளனர் என்பது பார்வையாளர்களுக்கு உடனடியா தெரிவதில்லை. தமிழ் மண முகப்பில் பதிவுக்கான படத்தை தெரிய வைப்பதன் மூலம் இந்த குறையை நீக்க முடியும்....

எடுத்துக்காட்டுக்கு எங்கள் வேடந்தாங்கல் பதிவிலும், என்னோட இடம் என்ற இடத்திலும் கூட எழுதுகிறேன். இரண்டில் எதில் பதிவிட்டாலும் அதற்கான தனியான படம் தெரியும்.

ஓரத்தில் படத்தில் உள்ள இரண்டும் நான் எழுதிய பதிவாக இருந்தாலும் இரண்டுக்கும் தனித் தனி படம் இருப்பதால் பதிவர்களுக்கு சுலபமாக விளங்கும்.




பெரும்பாலானவர்கள் இதை விரும்பினாலும் இதற்காக தமிழ் மண கருவிப்பட்டையில் செய்ய வேண்டிய மாற்றங்களின் சிரமத்தைக் கருதி செய்யவில்லை. என்னால் முடிந்த அளவு சுலபமாக அதை விளக்குகிறேன்....

அதற்கு முன் உங்கள் பதிவில் தமிழ் மணக் கருவிப்பட்டை சேர்க்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் பூர்ணாக்காவின் இந்த பக்கத்திற்கு சென்று சேர்த்துக் கொள்ளுங்கள். சுலபமான வழிமுறைகளுடன் சிறந்த இடமிது
http://poorna.rajaraman.googlepages.com/home

இனி......... இதற்கு செய்ய வேண்டிய மாற்றத்தை இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.

1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்
2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்


1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்

முதலில் நீங்கள் எந்த படத்தை தமிழ் மண முகப்பில் வர வைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அந்த படத்தை தயார் செய்து கொள்ளுங்கள். அது உங்களது புகைப்படமாகவோ, அல்லது உங்கள் பதிவின் பெயர் கிராபிக்ஸ் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். இதை இணையத்தில் upload செய்ய வேண்டும்.

இணையத்தில் upload செய்ய..... http://www.imageshack.us/ இங்கு செல்லுங்கள்.





படத்தில் உள்ளபடி இந்த இணையதளம் திறக்கும்.
1. Browse பொத்தானை அழுத்தி உங்களது படத்தைத் தேர்ந்தெடுங்கள்
2. Resize Image என்று உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும்
3. அதை அடுத்து உள்ள DropDown List ல் 100 x 75 (Avatar) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4. Host it என்பதை அழுத்தவும்....

சற்று நேரத்தில் நாம் அளித்த படம் http://www.imageshack.us/ தளத்தில் ஏற்றப்பட்டு நமக்கு அதற்கான URL கள் தரப்படும். (கீழே உள்ளவாறு) அதில் கடைசியாக உள்ள URL ஐ நாம் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

(எ.கா) http://img201.imageshack.us/img201/1695/meoldrp5.png


இப்போது முதல் கட்டம் முடிந்தது.

2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்

இனி உங்கள் Blogger கணக்கில் Login செய்து நுழைந்து கொள்ளுங்கள். அங்கு
Dash Board, Layout, Edit HTML பகுதிக்கு செல்லுங்கள். Edit Template என்பதற்கு கீழே இருக்கும் Expand Widget Templates என்பதில் உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவின் HTML CODE முழுவதுமாக கீழே இருக்கும்.


முதலில் இவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து பிரதி எடுத்து பாதுகாப்பாக ஒரு நோட்பேட் பைலில் வைத்துக் கொள்ளுங்கள்


இனி அதில் தமிழ் மண கருவிப்பட்டை இரண்டுக்கு செல்லுங்கள்.... அது கீழ்க்கண்டவாறு இருக்கும்.




முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கணும்னா தமிழ்ப்ரியன் வலைப்பூவுக்கு போயிடுங்க சாமீ. நான் எவ்வளவோ முயற்சி செஞ்சும், அவர் போட்டிருக்கிற HTML CODE என் வலைப்பூவுல தெரிய மாட்டேங்குது.

2 comments:

Anonymous said...

குட் லொடுக்கு

Thamiz Priyan said...

Edit Template என்பதற்கு கீழே இருக்கும் Expand Widget Templates என்பதில் உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவின் HTML CODE முழுவதுமாக கீழே இருக்கும்.

அதில் உங்கள் பதிவின் தமிழ் மண கருவிப்பட்டை கிடைக்கும் மிஸ்டர் லொடுக்கு பாண்டி.

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.