இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Sunday, August 24, 2008

செத்து செத்து விளையாடுவோமா?: தம்பி கேட்ட கேள்வி இது!

பதிவர் தம்பி 2006ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி எழுதிய பதிவுதான் இது. செத்து செத்துவிளையாடுவோமா என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் சுவாரஸ்யமான பதிவை நீங்களும் படியுங்களேன்.
Image Hosted by ImageShack.us

மேல இருக்கற நம்ம கைப்புள்ளயின் வலது
கரத்தை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன். சமீப காலமா பிரபலமாகிட்டு
வரும் நகைச்சுவை நடிகர்.

"என் புருசன் குழந்தை மாதிரி" படத்தில
வடிவேலுவ ஓட ஒட வெரட்டி, கொலவெறியோட
ஆவேசமா தொரத்தி காதை லேசா தொட்டு பச்ச
புள்ள மாதிரி விளையாட்டு விளையாடுவாரே
அவர்தான் இந்த முத்துக்காளை. சங்கத்தில
இருக்கற ஆளுங்களுக்கு இவர தெரிஞ்சிருக்கும்.

சில சமயத்தில சரக்கை விட ஊருகாய் நல்லா
இருக்கறதில்லையா அதே மாதிரி இவர் நடிச்ச
ராமகிருஷ்ணா என்ற படத்தில சார்லி இருந்தும்
இவரது நடிப்பையே எல்லாரும் ரசித்தார்கள்.
நான் உட்பட. தமிழ் நகைச்சுவை காட்சிகளில்
எனக்கு தெரிந்து மோனோ ஆக்டிங் என்பதை
புகுத்தியவர் இவர் என்றே நினக்கிறேன். இல்லாத
ஒன்றை இருப்பதாக காட்டி பிறரை ஏமாற்றுவதை
ராமகிருஷ்ணா படத்தில் மிக அருமையா காமெடி
பண்ணியிருப்பாரு.

Image Hosted by ImageShack.us

ஒரு பைட்டராக திரையுலகில் அறிமுகமாகி இன்று
நகைச்சுவையில் குறிப்பிடும்படியான இடத்தை
பிடித்திருக்கிறார்.

இப்ப என்னாத்துக்கு இந்த இழு இழுக்கற நீ?
மேட்டர் இன்னானு சொல்றா வென்று! என்று
கேட்பதற்கு முன்னால் நானே சொல்றேன்.
நேத்திக்கு வழக்கம்போல வலைப்பக்கத்தில
உலாத்திக்கிட்டு இருந்தேன். இட்லிவடை பக்கத்தில
கூகிள் தேடுதல் பத்தி எழுதி இருந்தார்.
இப்படியெல்லாம் வசதி இருக்குதான்னு பாத்தேன்.
நாம எக்கு தப்பா கேட்டா என்ன பதில்
சொல்லும்னு பாத்தேன். அப்டி என்னப்பா
கேட்டுபுட்டே நீயின்னு நாதஸ் கோஷ்டில வர
ஆளுங்க செந்தில கேட்ட மாதிரி கேளுங்க..

நான் எப்ப சாகப்போறேன்? இதத்தான் கேட்டேன்.
இன்னும் பதிமூணு வருசந்தான் என்னோட ஆயுசாம்
அதுக்குள்ள பூட்ட கேசுதானாம். அந்த வலைதளத்தில்
சொல்லியிருந்தாங்க.முத்துக்காளை ஞாபகம் வந்துடுச்சி
இந்த தளத்தை பார்த்தவுடன். செத்து செத்து
விளையாடலாமா? பாத்ததும் சிரிப்பு சிரிப்பா
வந்திடுச்சி அப்படியே ஒரு யோசனையும் வந்திச்சு
இதெல்லாம் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்
என்று ஒரு கற்பனை.

வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடறவங்க
இறந்தநாளும் தெரிஞ்சா அதையும் கொண்டாடுவாங்களா?
இல்ல துக்கப்பட்டு அன்னிக்கே ஒப்பாரி வைக்க
ஆரம்பிச்சுடுவாங்களா?. அன்னிக்கு கேக் வெட்டி
கொண்டாடுவாங்களா? புதுத்துணி உடுத்துவாங்களா?
கோயிலுக்கு போயி கடவுள்கிட்ட பெட்டிஷன்
குடுப்பாங்களா?

3 comments:

லொடுக்குபாண்டி said...

1..2..3.. testing

cheena (சீனா) said...

aakaa இப்படி ஒரு விளையாட்டா - எனக்கு இன்னும் 26 ஆண்டு இருக்கு - அவுக கரெக்டாத்தான் சொல்லி இருப்பாக

cheena (சீனா) said...

aakaa இப்படி ஒரு விளையாட்டா - எனக்கு இன்னும் 26 ஆண்டு இருக்கு - அவுக கரெக்டாத்தான் சொல்லி இருப்பாக

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.