இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Wednesday, August 20, 2008

இஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா? : கோவிகண்ணனின் அசத்தல் பதிவு

வலைபதிவர் கோவி கண்ணன்2006ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி எழுதியுள்ள ஒரு பதிவுதான். மிக மிக நல்ல பதிவாக எனக்கு தெரிந்ததால் அதனை இங்கே போட்டிருக்கிறேன். நீங்களும் அந்த பதிவை படிச்சிட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்களேன்.




தனிமனிதர்கள், குழுக்கள் ஒரு இழி செயலை செய்தால் பெரும்பாலும் அந்த குழுக்களைச் சார்ந்த மதம் வெளியில் தெரியாது. அந்த குழுக்களின் அல்லது அந்த தனிமனிதனின் செயல் மட்டுமே விமர்சிக்கப்படும் கண்டிக்கப்படும்.


நியூயார்க செப் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் வரை அப்படித்தான் இருநதது. அதன் பிறகு தீவிரவாதிகள் மீதான பார்வை பெயரை வைத்து மதம் சார்ந்ததாக போதிக்கப்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தையே இழிவு படுத்தும் செயல் நடந்து வருகிறது. இஸ்லாமைப் பின்பற்றுபவர் அந்த மதத்தில் உள்ள பெயரைத் தானே வைத்திருபார்கள். தீவிரவாதியின் பெயரை மட்டும் பார்த்துவிட்டு அவன் எந்த (கேடுகெட்ட) காரணத்திற்கு செய்கிறான் என்று பார்க்காமல் உடனடியாக இஸ்லாம் மீது புழுதிவாரி தூற்ற ஒரு நல்ல சந்தர்பமாக எதிரிகள் வதந்திகளை கிளப்பிவிட்டு இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்தை விதைத்து வருகிறார்கள்.

உண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை. கீதையைப் போலவே போர்களத்தில் நிற்கும் போது என்ன சிந்திக்க வேண்டுமோ அதை மட்டும் போதிக்கிறது. அவற்றை கவணத்தில் கொள்ளாமல் இஸ்லாம் போரைத் தூண்டுவதாக இஸ்லாம் மார்க்கத்தை தூற்றுபவர்களும், அப்பாவி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில் தீவிரவாதிகளும் திருக்குரானை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

கொடுங்கோல் ஆட்சி நடத்திய ஒளரங்கசீப்பை கடைசியில் மனிதன் ஆக்கியது திருக்குரான். வரலாறுகளில் தங்களுக்கு சாதகாமான தனிமனித தவறுகளை மாட்டும் படித்துவிட்டு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக தங்கள் விசவிதைகளை தொடர்ந்து பலர் விதைத்து வருகின்றனர். இவற்றை பல இஸ்லாமிய சகோதரர்கள் ஞாயமான முறையில் தான் பதிலளித்தும் வருகின்றனர்.

இஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் தன் மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதி என்றாலும் தயங்காமல் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக தற்போதைய மாபெரும் தீவிரவாத செயலை காட்டிக் கொடுத்து முறியடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. அந்த செயல் முறியடிக்கப் பட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு செப். 11 நிகழ்வை உலகம் சந்தித்திருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் இந்த செயல் மாற்று மதத்தினர் இஸ்லாம் மீது மேலும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம் இருநாடுகளுக்கிடையே காஷ்மிர் பிரச்சனை இருந்தாலும் அதிபர் முஷ்ரப்பையும், பாகிஸ்தான் அரசையும் மனம் திறந்து பாராட்டலாம்.

இஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது.

ஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் முஷ்ரப் அமெரிகாவின் பாராட்டும் பரிவையும் எதிர்பார்த்துத் தான் இதைச்செய்தார் என்றும் கூட சொல்வார்கள் !

1 comments:

jagadeeswaran said...

தசவதாரம் பாணியில் படிக்கவும்

இஸ்லாமியர்களில் நல்லவங்க இல்லையின்னு நான் சொல்லல, இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமுன்னு சொல்லறேன்....

இரட்டை கோபுரம் தகர்ந்தாச்சு, பாக்கிஸ்தானிலும் பல குண்டு வெடிச்சாச்சு, இந்தியா பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்தாச்சு, அடுத்து என்ன நடக்குமோ தெரியல.அந்த நல்லவங்க எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க.

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.