ஒன்லிரஜினி டாட் காம் இணையத்தி, குசேலன் லாபநஷ்ட கணக்கு பற்றிய ஒரு அலசல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதனை நீங்களும் படியுங்களேன்.
குசேலன் நஷ்டம் - ரஜினி தனது சம்பளத்திலிருந்து பல கோடிகள் திருப்பி கொடுத்தார்!
குசேலன் விவகாரம்; விநியோகஸ்தர்கள் சாய் மீரா அலுவலகம் முற்றுகை!
குசேலன் படம் - விநியோகஸ்தர்கள் குமுறல்!
இது போன்ற செய்திகளை கிளப்பிவிட்டுவிட்டு அல்ப சந்தோசம் அடையும் வெப் சைட்டுகள் மற்றும் பத்திரிகைகளை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
அது எப்படி அய்யா ரஜினி படத்திற்கு மட்டும், வெளிவந்த சில நாட்களிலேயே உங்களுக்கு லாப நஷ்டக்கணக்கு தெரிந்து விடுகிறது?
எந்த ஒரு படமும் வெற்றி பெற்றுள்ளதா அல்லது தோல்வி அடைந்துள்ளதா என்று தெரிய குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது ஆகும். லாப நஷ்டம் மற்றும் வசூல் குறித்து (முதன்மை நிலவரம்) தெரிய ஒரு வாரமாவது ஆகும். ஆனால் தினமலர் குசேலன் வெளியான அடுத்த நாளே படம் தோல்வி என செய்தி வெளியிட்டது. மேலும் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பதாகவும் சாய் மீரா அலுவலகத்தை முற்றுகை இட்டதாகவும் செய்தி வெளியிட்டு தனது வக்கிர புத்தியை காண்பித்தது. மேற்படி நாளிதழே சில விநியோகஸ்தர்களை பணத்தை திருப்பி கேட்கும்படி தூண்டி விட்டதாகவும் தகவல். ஆனால் எவரும் இவர்கள் வலையில் சிக்கவில்லை. பின்னர் இவர்களாகவே ஒரு பொய் செய்தியை வெளியிட்டனர்.
திரையுலகில் உள்ள நடைமுறை என்ன?
ஒரு படம் வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர் அந்த படத்தால் நஷ்டப்பட்டால், அவர் நேரடியாக தயாரிப்பாளரை அணுகுவதில்லை. முதலில் அவர் சக்திமிக்க விநியோகஸ்தர் சங்கத்தை அணுகவேண்டும். (விநியோகஸ்தர் சங்கத்திலிருந்து இதுவரை குசேலன் குறித்து புகார் எதுவும் வரவில்லை. நாகா ரவி போன்ற சில மோசடிப்பேர்வழிகள் தான் தான்தோன்றி தனமாக சங்க விதிகளுக்கு முரணாக பேசி வருகின்றனர்). சங்கத்தில், ஒருவர் தயாரிப்பாளரிடம் எந்த அடிப்படையில் படத்தை வாங்கினார் என்று பார்த்து அதற்கேற்ற வகையில் தீர்வு காணப்படும். ரஜினியின் படத்தை பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் மினிமம் கியரன்டீ அடிப்படையில் தான் வாங்குவர். இந்த முறையில் படம் வாங்கி யாரவது நஷ்டப்பட்டால், நஷ்டஈடு கேட்கும் தார்மீக உரிமை அவர்களுக்கு கிடையாது. சங்கத்தின் மூலமாக சென்றாலே தார்மீக உரிமை கிடையாது எனும்போது விநியோகஸ்தர்கள் தாங்களாகவே சாய் மீரா சென்று கேட்டனர் என்பது எவ்வளவு பெரிய பொய். ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்?
கவனிக்க: விநியோகஸ்தர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள சங்கத்தின் மூலமாகவே அணுகவேண்டும் என்று ஒரு விதி உள்ளது. விநியோகஸ்தர்கள் சங்கம் குசேலன் குறித்து எந்த ஒரு புகாரும் இதுவரை அளிக்கவில்லை.
ஒரு நடிகருக்கு ஒரு படத்தின் தோல்வியால் எழும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அது தயாரிப்பாளரை மட்டுமே சார்ந்தது.
வெறும் நடிகனாக மட்டுமே பணிபுரிந்த ‘குசேலன்’ விஷயத்தில் - அவர் பணத்தை திருப்பி தந்தார் என்பது எவ்ளோ பெரிய கட்டுகதை? ரஜினியின் மௌனத்தை இருந்தாலும் இப்படியா அட்வான்டேஜ் எடுத்து கொள்வது? பாவிகளா!!
(பாபா படத்தின் தயாரிப்பாளராகவும் ரஜினி இருந்தபடியால் எந்தவித தயக்கமும் இன்றி கோடிக்கணக்கான பணத்தை திருப்பி தந்தார்.)
மேலும் ரஜினி குசேலன் படத்திற்காக கவிதலயாவிடம் ஒரு பைசா கூட பெற்றுக்கொள்ளவில்லை. அவர் சம்பளமாக பெற்றது செவென் ஆர்ட்ஸ் விஜய்குமாரிடமும் அஸ்வினி தத்திடமும்தான்.
மறுபடியும் கவனிக்க: ஒரு நடிகருக்கு ஒரு படத்தின் தோல்வியால் எழும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அது தயாரிப்பாளரை சார்ந்தது.
இருப்பினும் எந்த அடிப்படையில் ரஜினியின் தலை இதில் உருட்டபடுகிறது?
அவர் ஒருவர் மட்டுமே நஷ்டம் என்று ஏற்பட்டால் பணத்தை திருப்பி தருவார் என்ற ஒரு நம்பிக்கை விநியோகஸ்தர்களிடம் இருப்பதால்!!
வேறு யாரிடமும் இதை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. ரொம்பவே நல்லவராக ரஜினி இருப்பதால் இது போன்ற தொல்லைகள் அவருக்கு சகஜம்.
கை கொடுத்து நம்பிக்கையூட்டிய சூப்பர் ஸ்டார்
இருப்பினும் சாய் மீராவை தொடர்புகொண்ட சூப்பர் ஸ்டார், “கவலைபடாதீர்கள். நிலவரத்தை சிறிது காலம் பார்ப்போம். தேவைப்பட்டால் நான் வேண்டியதை செய்கிறேன்” என்ற உறுதி மொழி கொடுத்திருக்கிறார். எவனுக்கையா வரும் இப்படி ஒரு தாராள மனசு? தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் எக்கேடு கேட்டால் எனக்கென்ன? என்னை பொறுத்தவரை என் பங்கு முடிந்துவிட்டது; என் பட லிஸ்ட்டில் ஒன்று கூடி விட்டது என்று கை கழுவிவிட்டு போகும் இந்த காலத்தில் ரஜினி போல் ஒரு நடிகரை பார்ப்பது அரிது…மிகவும் அரிது…
“படம் வெளியாகி இரண்டு வாரம் தானே ஆகிறது. மொத்த வசூல் குறித்து இப்போது எப்படி முடிவு செய்வது? படம் வெளியாகி ஐந்து வாரங்கள் கழியட்டும். நமக்கும் மொத்த வசூல் குறித்து ஒரு முழுமையான ஒரு முடிவுக்கு வர இயலும். அந்த சமயத்தில் தேவைப்பட்டதை செய்யலாம்” என்று தலைவர் சாய் மீராவிற்கு ஆலோசனை கூறியிருப்பதாக தகவல். சாய் மீராவும் இதை விநியோகஸ்தர்களிடம் கூறி தெம்பூட்டியிருக்கிறது. (இருப்பினும் தினமலர், நக்கீரன் போன்ற சில பத்திரிக்கைகள் தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன.)
தமிழில் ஒவ்வொரு ஆண்டும் எழுபதுக்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வருகின்றன. அவற்றில் ஒரு சில படங்களை தவிர பெரும்பாலான படங்கள் நஷ்டத்தையே தருகின்றன…அவற்றை பற்றியெல்லாம் எந்த செய்தியும் வருவதில்லையே ஏன்? (சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் அவர்களது பி.ஆர்.ஓக்கள் மேல் பயமா?)
சரி பத்திரிக்கைகள் ஏன் இப்படி ரஜினி மீது மட்டுமே குறி வைக்கின்றன ?
பல காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
முதலாவது - அவர் ரொம்ப நல்லவர்; எதையும் பொருட்படுத்தமாட்டார்! அதுதான்!!
இரண்டாவது - ரஜினி பற்றி என்ன எழுதினாலும் கேட்ப்பதற்கு யாரும் இல்லை. சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கும் இலவச பப்ளிசிட்டி. செய்திக்கும் செய்தி.
மூன்றாவது - அவர் ரசிகர்கள். அவர்கள் அவரைவிட ரொம்ப நல்லவர்கள். இருக்கும் இடமே தெரியாத ஜீவன்கள்.
நான்காவது - ரஜினியை ஒழிக்க இதைவிட ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமா?
சரி ஏன் ரஜினியை ஒழிக்க இவர்கள் நினைக்க வேண்டும்?
மறுபடியும் முதலாவது பாயிண்ட்டை படிக்கவும்.
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Tuesday, August 19, 2008
குசேலன் லாபமா? நஷ்டமா? : ரசிகனின் புலம்பல்
Posted by லொடுக்குபாண்டி at 7:20 AM
Labels: onlyrajini.com
Subscribe to:
Post Comments (Atom)
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.
5 comments:
WELCOME MR.LODUKKU PANDIIII
As per Trade , it will fetch normal collection which is equvalent to super hit of Front runner hereos. But due to super star status traders expect Jackpot . When they didnt get it they always whine . ( Pasupath is hero of Kuselan or Rajni )
As per Director K.S. Ravikumar , BABA collection is more than Same year hit movies but it is called failure due to bar raisen by every Rajni movies .
ஐந்துரூபா பொருளை அம்பதுக்கு வாங்கினால் நட்டம்தான் வரும்
கன்னடா கருப்பன் ரஜினிக்கு சப்போர்ட் பன்ன வேண்டாம் என்ரு அன்புடன் கேட்டு கொள்கிரேன்.
குழப்பவாதி குசேலன் என்ற தலைப்பில் நான் எழுதியதி பார்க்கலயா/?
http://priyamudan-prabu.blogspot.com/
Post a Comment