கைக்குட்டை அளவு துணின்னு கேள்வி பட்டு இருக்கேன், ஆனா இதுல தான் பார்க்கிறேன் என்ற வாசகத்துடன் பதிவர் கிரி ஒரு பதிவையும் எழுதி கலர்புல் கவர்ச்சி படங்களையும் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி வெளியிட்டிருக்கிறார். அதை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.
கைக்குட்டை அளவு துணின்னு கேள்வி பட்டு (உதவி நமது தமிழ் பத்திரிக்கைகள்) இருக்கேன் , ஆனா இதுல தான் பார்க்கிறேன் :D இதுல வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகள், கீழ் !! இருந்து மேல் நோக்கி எடுக்க படுவதாக ஒரு குற்றச்சாட்டு வேற! கீழே உள்ள படத்துல அப்படி எடுத்தா என்ன வரும்னு எண்ணி பார்க்க தோன்றிய எண்ணத்தை ஏனோ கைவிட்டேன்.
பொடி ரசிகன் போல இருக்கு .. அட! கிரிக்கெட்டுக்கு ரசிகன்னு சொல்ல வந்தேங்கIPL Twenty-20 போட்டிகள் நடைபெறும் இடத்தில் கிரிக்கெட் ரசிகர்களை !! உற்சாகப்படுத்த !!! அமெரிக்காவில் இருந்து அழகான பெண்களை இறக்குமதி ;) செய்து இருக்கிறார்கள். அவர்களும் கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் செய்யாமல் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் கிரிக்கெட்டை பார்க்கிறார்களோ இல்லையோ இந்த கவர்ச்சி கன்னிகளை பார்த்து பிறந்த பலனை அடைந்து வருகிறார்கள். இதை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டம் ஆரம்பித்து விட்டது (சென்னை ரசிகர்கள் அப்பாடா! நல்லவேளை நம்ம போட்டி நல்லபடியா கண்களுக்கு குளிர்ச்சியா முடிந்தது என்று நிம்மதி அடைந்து விட்டார்கள்), இது குறித்து பாராளுமன்றத்திலும் பிரச்சனை எழுந்து விட்டது.
இது சரியா தவறா என்ற பிரச்சனை ஒரு புறம் இருக்கட்டும் இந்த மாதிரி பெண்களை வைத்து ரசிகர்களை !!! இழுத்து கோடி கோடியாக சாம்பாதிக்கும் அம்பானி, ஷாருக், விஜய் மல்லையா, ப்ரீத்தி ஜிந்தா மற்றும் BCCI யை என்னன்னு சொல்வது, நமது ரசிகர்களும் இது புரியாமல் (உண்மை கிரிக்கெட் ரசிகர்களை தவிர்த்து) பணத்தை கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கிவிட்டு இவர்கள் ஏமாந்தது தெரியாமல் இந்த பெண்களை பார்த்த அல்ப சந்தோசத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.
இது ஒருபுறம் என்றால் நம்ம ஹர்பஜன் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்து விட்டதாகவும் அதனால் ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இதனால் அணித்தலைவர் யுவராஜ் சிங், ஹர்பஜன் மேல் கோபத்தில் இருப்பதாகவும் இதன் மேல் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறி உள்ளார்.
இவர்கள் லீக் போட்டிக்காக அடித்து கொண்டால், நாளை மற்ற நாடுகளுடன் நடக்கும் போட்டிகளில் எப்படி உண்மையான ஒற்றுமை உணர்வுடன் விளையாடுவார்கள். இதே மன நிலையுடன் இருந்தால், இவ்வாறு முறைத்து கொண்டால் நம்முடைய நாட்டின் மானம் தான் போகும். கடைசியில் ஹைடன் சொன்னதை (He is a mad boy) ஹர்பஜன் நிருபீத்து விட்டார் என்று நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது, அவரை நினைத்து அல்ல நம் நாட்டை பற்றி மற்ற நாட்டவர் என்ன நினைப்பார்கள் என்று.
5 comments:
spr :-)
IPL முடிஞ்சு மூணு மாசம் ஆச்சு!
விடுங்கப்பு. வியாபாரம்தானே!!!!
//IPL முடிஞ்சு மூணு மாசம் ஆச்சு!//
:)))))))))))))))))))))))))))))))
machan kalakitada by MobileBaby 9952217410
உங்கள் மகத்தான சேவை தொடர வாழ்த்துகள்
Post a Comment