இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Saturday, August 16, 2008

காங்கிரஸ் கட்சி சந்நியாசி மடமா?


தினகரன் நாளிதழில் இன்று வெளியாகியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டப்பேரவை கட்சி தலைவர் சுதர்சனம் ஆகியோரி பேட்டி சுவாரஸ்யமாக இருந்தது. அதை நீங்களும் படியுஙங்களேன்.

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் தேசியக் கொடியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஏற்றினார். நிகழ்ச்சியில், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:

அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் ஒளி வீச பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களின் லட்சியம். தமிழகத்தை மீட்டெடுக்க தொண்டர்கள் பாடுபடவேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக் குழு பரிந்துரையை ஏற்று ஊதிய உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வழியை பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள்:

தமிழகத்தை மீட்டெடுப்போம் என்று கூறினீர்களே?

தங்கபாலு: நாங்கள் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்காக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வர விரும்புவது தவறா?

திமுக கூட்டணியில் இருக்கும் போது, காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறீர்களே?

தங்கபாலு : காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் காங்கிரசாரின் லட்சியம். வருங்காலத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்.

சுதர்சனம் : நாங்கள் சந்நியாசி மடம் நடத்தவில்லை. கட்சி நடத்துகிறோம். 10 பேர் கொண்ட கட்சிகள் கூட, ‘அடுத்த முதல்வர் நாங்கள்தான்’ என கூறுகிறார்கள். அவர்கள் கூறும்போது அகில இந்திய கட்சியான காங்கிரசுக்கு முதல்வர் பதவி மீது ஆசை இருக்கக் கூடாதா?

அப்படியானால் ராமதாஸ் சொன்னபடி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையுமா?

சுதர்சனம்: தமிழகத்தை ஆளும் தகுதி காங்கிரசுக்கு உள்ளது. ஆட்சி அமைக்க சூளுரை எடுத்துக் கொள்கிறோம்.

தங்கபாலு : தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். தொண்டர்களிடம் எழுச்சி உள்ளது. காமராஜர் ஆட்சி அமைய காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர்கள் பதிலளித்தனர்.

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.