சென்னை தியாகராயநகருக்கு பெருமை சேர்க்கும் ரங்கநாதன் தெருவுக்கு பெருமைசேர்க்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடையில தீ பிடிச்சிடிச்சின்னு கேள்விபட்டதும் பைக்க எடுத்துட்டு மயிலாப்பூருல இருந்து ஆழ்வார்பேட்டை வழியா தேனாம்பேட்டை சிக்னலை கடந்து பாண்டிபசார் வயழியா தி.நகர் போனேன். தேனாம்பேட்டை சிக்னலில் பச்சைவிளக்கு சிக்னலுக்கு நின்னப்பவே தூரமா கரும் புகை தெரிஞ்சிது.
வேகவேகமா தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு நண்பரின் ஆபீஸ் முன்னால வண்டிய நிறுத்திட்டு உஸ்மான் ரோட்டுல நடந்து போனேன். ஒரே கூட்டம். அங்க ரங்கநாதன் தெருவுக்குள்ள போக யாரையுமே போலீஸ்காரங்க அனுமதிக்கல. சரவணா ஸ்டோர் கடையில வேலை பாக்குறவங்களும் அங்கங்க நின்னு பரிதாபத்தோட வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட உள்ள யாராவது இருந்தாங்களான்னு கேட்டேன்.
ஆமா சார்... ராத்திரி பண்ணென்டு மணிக்குத்தான் கடைய அடைப்போம். காலையில 5 மணிக்குக்கெல்லாம் கொஞ்சம்பேர் கடையை தூக்குறதுக்கு உள்ள வருவோம். 25 பேராவது காலையில் கடைக்கு வந்துடுவோம். இன்னிக்கும் 25 பேர் வந்திருப்பாங்க. அவங்க கடைக்குள்ள போனாங்களான்னு தெரியல. இங்க எங்கயாது இருக்காங்களான்னு சுத்தி பாக்குறோம். தீ எரியறத பாத்தா பயமா இருக்கு. கடைக்குள்ள தீயை அணைக்க 20 போனாங்கன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க....ன்னு சொல்லி கண்ணீர் வடித்தார்.
உண்மையிலேயே கடைக்குள்ள சரவணா ஸ்டோர் கடை உழியர்கள் போனாங்களா? அவங்க நெலம என்னன்னு தெரியல. பிளாஸ்டிக், மர பொருள் எரிவதால் தீயை அணைக்க முடியாம போலீஸ் தவிச்சிட்டு இருக்கு. தீய முழுசா அணச்சாத்தான் முழு வெவெரமும் தெரியும்ன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க.
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Monday, September 1, 2008
நேரடி ரிப்போட்: தீயை அணைக்க போனவர்களின் 20 பேர் கதி...
Posted by லொடுக்குபாண்டி at 12:38 PM 2 comments
Labels: saravana store, spot report, tnagar
FLASH NEWS : கரண்ட் பிரச்சினை : கருணாநிதி ராஜினாமா முடிவு?
தமிழ்நாடு முழுசும் அறிவிக்கப்படாத மின்தடை என்ற நிலைமை மாறி இன்று முதல் அறிவிக்கப்பட்ட மின்தடை செயல்படுத்தப்பட்டுள்ளது. டெய்லி ராத்திரி பகல் பாராமல் அஞ்சு மணி நேரம் கரண்ட்டை புடுங்கி விடும் அரசாங்கத்துக்கு அண்ணா திமுக, பாமக, மதிமுக, தேமுதிக, சமக, கம்யூனிஸ்ட்டுங்கன்னு எல்லா கட்சிங்களும் கண்டனமா தெரிவிச்சிட்டு இருக்காங்க. மாண்புமிகு புரட்சி தலைவி இதயதெய்வம் டாக்டர் அம்மா, கரண்ட்டை சரியா கையாள தெரியாத கருணாநிதி ராஜினாமா செய்யணும்னு அறிக்கை வுட்டுருக்காங்க.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு தொடர்பாக அம்மா விடுத்துள்ள அறிக்கை:
தற்போது தமிழ்நாட்டில் "அறிவிக்கப்பட்ட மின்வெட்டு', "அறிவிக்கப் படாத மின்வெட்டு' என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.
தற்போதைய மின் நிலைமைக்கு திமுக அரசு தெரிவிக்கும் முதல் காரணம், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது என்பதாகும். எனது ஆட்சிக் காலத்தின் முதல் 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நிர்வாகத் திறமையின்மையே இதற்கு முக்கியக் காரணம்.
அரசு சொல்லும் 2வது காரணம், நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதாகும். சுய லாபத்திற்காக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெறும் கருணாநிதியால் இதை ஏன் பெற முடியவில்லை?
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரி வினியோகிக்கப் படுவதாகவும், பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முறையாக, சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
மூன்றாவதாக கூறப்படும் காரணம், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் குறைந்துவிட்டது என்பதாகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 7 மாதங்கள், குறைந்தபட்சம் 5 மாதங்கள் மட்டும் தான் காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால் தமிழ் நாட்டிலோ ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.
காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்காத காலங்களில் அனல், புனல் மற்றும் மத்திய தொகுப்பி லிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு காற்றை எதிர்நோக்கி இருக்கிறோம்; நீரை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லப்படும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமானது.
நான்காவதாக கூறப்படும் காரணம், பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்தபோதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது என்பதாகும். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந் தாவது வாங்கி வினியோகிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். குறைந்த அளவுதான் வாங்க முடிகிறது என்கிற காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.
இன்னும் சில காரணங்களான "குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது', "மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும், மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு மைய அரசை கோரியுள்ளது' போன்றவற்றை பார்த்தால் மின்வெட்டு தொடரும் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சட்டசபையை கலைக்க வேண்டும்:
முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு பதவிக்கு வர வழி ஏற்படும்.
இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை மக்கள் தற்போது விரும்பவில்லை, வெறுக்கிறார்கள். எனவே கருணாநிதி உடனடியாக சட்டசபையக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சிதலைவி டாக்டர் அம்மாவோட கோரிக்கய ஏத்துக்கிட்டு மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் ராஜினாமா செய்வாரா, மாட்டாரான்னு யாருக்காவது சந்தேகம் இருக்கா? சந்தேகமே இல்லாதவங்க உங்களோட பதிலை இங்க சொல்லிட்டு போங்க.
தலைப்புல இருக்குற மாதிரி ஒரு செய்தி கண்டிப்பா கருணாநிதி, ஜெயலலிதான்னு யாரு ஆட்சியிலயும் வரவே வராதுங்கிறதுதான் என்னோட ஒப்பீனியன். நீங்க என்ன சொல்றீங்கணா?
Posted by லொடுக்குபாண்டி at 10:07 AM 4 comments
Labels: flash news, karunanithi
Sunday, August 31, 2008
டாக்டர் ராமதாசுக்கு மக்கள் வெச்சிருக்குற பட்டப்பெயர்கள்

சினிமாவுல காமெடி நடிகர்கள் பண்ணும் காமெடியை விட அதிகமாக காமெடி செஞ்சு மார்க்குகளை அள்ளியிருப்பவர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள். சினிமா, அரசியல், விளையாட்டு என்று எதையுமே விடாமல் விமர்சித்து தள்ளும் இந்த ராமதாசுக்கு, பச்சோந்தி, பச்ச கஞ்சா, காடுவெட்டிக்கு காவல்காரன் என்று பல பெயர்களை அரசியல்வாதிகளே சொல்லியிருக்கிறார்கள். நீங்க உங்க மனசுல இந்த ஐயாவுக்கு என்ன பெயர் வெச்சிருக்கீங்கப்பு... பயப்படாம சொல்லுங்கப்பு..........
Posted by லொடுக்குபாண்டி at 6:32 AM 9 comments
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.