பதிவர் தம்பி 2006ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி எழுதிய பதிவுதான் இது. செத்து செத்துவிளையாடுவோமா என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் சுவாரஸ்யமான பதிவை நீங்களும் படியுங்களேன்.
மேல இருக்கற நம்ம கைப்புள்ளயின் வலது
கரத்தை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன். சமீப காலமா பிரபலமாகிட்டு
வரும் நகைச்சுவை நடிகர்.
"என் புருசன் குழந்தை மாதிரி" படத்தில
வடிவேலுவ ஓட ஒட வெரட்டி, கொலவெறியோட
ஆவேசமா தொரத்தி காதை லேசா தொட்டு பச்ச
புள்ள மாதிரி விளையாட்டு விளையாடுவாரே
அவர்தான் இந்த முத்துக்காளை. சங்கத்தில
இருக்கற ஆளுங்களுக்கு இவர தெரிஞ்சிருக்கும்.
சில சமயத்தில சரக்கை விட ஊருகாய் நல்லா
இருக்கறதில்லையா அதே மாதிரி இவர் நடிச்ச
ராமகிருஷ்ணா என்ற படத்தில சார்லி இருந்தும்
இவரது நடிப்பையே எல்லாரும் ரசித்தார்கள்.
நான் உட்பட. தமிழ் நகைச்சுவை காட்சிகளில்
எனக்கு தெரிந்து மோனோ ஆக்டிங் என்பதை
புகுத்தியவர் இவர் என்றே நினக்கிறேன். இல்லாத
ஒன்றை இருப்பதாக காட்டி பிறரை ஏமாற்றுவதை
ராமகிருஷ்ணா படத்தில் மிக அருமையா காமெடி
பண்ணியிருப்பாரு.
ஒரு பைட்டராக திரையுலகில் அறிமுகமாகி இன்று
நகைச்சுவையில் குறிப்பிடும்படியான இடத்தை
பிடித்திருக்கிறார்.
இப்ப என்னாத்துக்கு இந்த இழு இழுக்கற நீ?
மேட்டர் இன்னானு சொல்றா வென்று! என்று
கேட்பதற்கு முன்னால் நானே சொல்றேன்.
நேத்திக்கு வழக்கம்போல வலைப்பக்கத்தில
உலாத்திக்கிட்டு இருந்தேன். இட்லிவடை பக்கத்தில
கூகிள் தேடுதல் பத்தி எழுதி இருந்தார்.
இப்படியெல்லாம் வசதி இருக்குதான்னு பாத்தேன்.
நாம எக்கு தப்பா கேட்டா என்ன பதில்
சொல்லும்னு பாத்தேன். அப்டி என்னப்பா
கேட்டுபுட்டே நீயின்னு நாதஸ் கோஷ்டில வர
ஆளுங்க செந்தில கேட்ட மாதிரி கேளுங்க..
நான் எப்ப சாகப்போறேன்? இதத்தான் கேட்டேன்.
இன்னும் பதிமூணு வருசந்தான் என்னோட ஆயுசாம்
அதுக்குள்ள பூட்ட கேசுதானாம். அந்த வலைதளத்தில்
சொல்லியிருந்தாங்க.முத்துக்காளை ஞாபகம் வந்துடுச்சி
இந்த தளத்தை பார்த்தவுடன். செத்து செத்து
விளையாடலாமா? பாத்ததும் சிரிப்பு சிரிப்பா
வந்திடுச்சி அப்படியே ஒரு யோசனையும் வந்திச்சு
இதெல்லாம் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்
என்று ஒரு கற்பனை.
வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடறவங்க
இறந்தநாளும் தெரிஞ்சா அதையும் கொண்டாடுவாங்களா?
இல்ல துக்கப்பட்டு அன்னிக்கே ஒப்பாரி வைக்க
ஆரம்பிச்சுடுவாங்களா?. அன்னிக்கு கேக் வெட்டி
கொண்டாடுவாங்களா? புதுத்துணி உடுத்துவாங்களா?
கோயிலுக்கு போயி கடவுள்கிட்ட பெட்டிஷன்
குடுப்பாங்களா?
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Sunday, August 24, 2008
செத்து செத்து விளையாடுவோமா?: தம்பி கேட்ட கேள்வி இது!
Posted by லொடுக்குபாண்டி at 10:19 PM 3 comments
Labels: umakathir.blogspot.com
தமிழ்மண முகப்பில் உங்க படம் : தமிழ்ப்ரியன் அசத்தல் ஐடியா
தமிழ்மணம் முகப்பில் உங்கள் படத்தை இடம்பெற வைக்கிறது எப்படின்னு பதிவர் தமிழ்ப்ரியன் அசத்தலான ஐடியாவை படத்துடன் கொடுத்திருக்கிறார். அதனை நான் ரெண்டு நாளிக்கு முன்னால முயற்சி செய்தேன். முடிவு இன்னும் கிடைக்கவில்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
தமிழ் மணத்தில் தங்களது பதிவை இணைத்துள்ள பதிவர்களில் பலரும் பல பதிவுகளிலும், கூட்டுப் பதிவுகளிலும் எழுதுகின்றனர். ஆனால் பலருக்கும் தமிழ் மண முகப்பில் பதிவு வரும் போது எந்த பதிவில் எழுதி உள்ளனர் என்பது பார்வையாளர்களுக்கு உடனடியா தெரிவதில்லை. தமிழ் மண முகப்பில் பதிவுக்கான படத்தை தெரிய வைப்பதன் மூலம் இந்த குறையை நீக்க முடியும்....
எடுத்துக்காட்டுக்கு எங்கள் வேடந்தாங்கல் பதிவிலும், என்னோட இடம் என்ற இடத்திலும் கூட எழுதுகிறேன். இரண்டில் எதில் பதிவிட்டாலும் அதற்கான தனியான படம் தெரியும். ஓரத்தில் படத்தில் உள்ள இரண்டும் நான் எழுதிய பதிவாக இருந்தாலும் இரண்டுக்கும் தனித் தனி படம் இருப்பதால் பதிவர்களுக்கு சுலபமாக விளங்கும்.
பெரும்பாலானவர்கள் இதை விரும்பினாலும் இதற்காக தமிழ் மண கருவிப்பட்டையில் செய்ய வேண்டிய மாற்றங்களின் சிரமத்தைக் கருதி செய்யவில்லை. என்னால் முடிந்த அளவு சுலபமாக அதை விளக்குகிறேன்....
அதற்கு முன் உங்கள் பதிவில் தமிழ் மணக் கருவிப்பட்டை சேர்க்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் பூர்ணாக்காவின் இந்த பக்கத்திற்கு சென்று சேர்த்துக் கொள்ளுங்கள். சுலபமான வழிமுறைகளுடன் சிறந்த இடமிது
http://poorna.rajaraman.googlepages.com/home
இனி......... இதற்கு செய்ய வேண்டிய மாற்றத்தை இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.
1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்
2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்
1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்
முதலில் நீங்கள் எந்த படத்தை தமிழ் மண முகப்பில் வர வைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அந்த படத்தை தயார் செய்து கொள்ளுங்கள். அது உங்களது புகைப்படமாகவோ, அல்லது உங்கள் பதிவின் பெயர் கிராபிக்ஸ் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். இதை இணையத்தில் upload செய்ய வேண்டும்.
இணையத்தில் upload செய்ய..... http://www.imageshack.us/ இங்கு செல்லுங்கள்.
படத்தில் உள்ளபடி இந்த இணையதளம் திறக்கும்.
1. Browse பொத்தானை அழுத்தி உங்களது படத்தைத் தேர்ந்தெடுங்கள்
2. Resize Image என்று உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும்
3. அதை அடுத்து உள்ள DropDown List ல் 100 x 75 (Avatar) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4. Host it என்பதை அழுத்தவும்....
சற்று நேரத்தில் நாம் அளித்த படம் http://www.imageshack.us/ தளத்தில் ஏற்றப்பட்டு நமக்கு அதற்கான URL கள் தரப்படும். (கீழே உள்ளவாறு) அதில் கடைசியாக உள்ள URL ஐ நாம் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
(எ.கா) http://img201.imageshack.us/img201/1695/meoldrp5.png
இப்போது முதல் கட்டம் முடிந்தது.
2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்
இனி உங்கள் Blogger கணக்கில் Login செய்து நுழைந்து கொள்ளுங்கள். அங்கு
Dash Board, Layout, Edit HTML பகுதிக்கு செல்லுங்கள். Edit Template என்பதற்கு கீழே இருக்கும் Expand Widget Templates என்பதில் உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவின் HTML CODE முழுவதுமாக கீழே இருக்கும்.
முதலில் இவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து பிரதி எடுத்து பாதுகாப்பாக ஒரு நோட்பேட் பைலில் வைத்துக் கொள்ளுங்கள்
இனி அதில் தமிழ் மண கருவிப்பட்டை இரண்டுக்கு செல்லுங்கள்.... அது கீழ்க்கண்டவாறு இருக்கும்.
முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கணும்னா தமிழ்ப்ரியன் வலைப்பூவுக்கு போயிடுங்க சாமீ. நான் எவ்வளவோ முயற்சி செஞ்சும், அவர் போட்டிருக்கிற HTML CODE என் வலைப்பூவுல தெரிய மாட்டேங்குது.
Posted by லொடுக்குபாண்டி at 6:46 AM 2 comments
Labels: majinnah.blogspot.com
குசேலன் முதல்வார வசூல் முழு விவரம்
குசேலன் படம் பிளாப். முதல் வாரத்திலேயே வசூல் ஆட்டம் கண்டுட்டுன்னு பத்திரிகை, டி.வி., வெப்சைட்னு திட்டி தீர்த்துட்டு இருக்காங்க. குசேலன் படத்தின் முதல் வார வசூல் முழு விவரத்தை பதிவர் சினிமா நிருபர் வெளியிட்டிருக்கிறார். அதனை நீங்களும் படியுங்களேன்.
குசேலன் படம் தமிழகம் முழுவதும் 84 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்த தியேட்டர்களுக்கு முதல் வாரத்தில் கிடைத்த வசூல் முமு விவர பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம். இதனை பார்த்தே குசேலன் எந்த அளவுக்கு ரசிகர்கள் சென்று பார்த்திருக்கிறார்கள் என்பது தெரியும். (கீழே இருக்கும் அட்டவணையை கிளிக்கி பெரிய சைஸில் படிக்கவும்)
Posted by லொடுக்குபாண்டி at 6:02 AM 4 comments
Labels: nirubar.blogspot.com
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.